Breaking

Saturday, July 11, 2026

போலி சான்றிதழ் தந்து பணியில் சேர்ந்த 3,000 ஆசிரியர்கள் 'டிஸ்மிஸ்'



This image shows a news article detailing the termination of teachers due to fraudulent certificates.

The Bihar government decided to terminate over 3,000 teachers who obtained their positions using forged educational certificates.

The fraudulent certificates were discovered during investigations by the state vigilance department, which revealed they were issued by fake colleges.

Some teachers resigned before official action was taken, but disciplinary proceedings are still being initiated against them to recover received salaries and benefits.

The article features a photograph of Mithilesh Tiwari, who commented on the issue while serving as the state education minister

போலி சான்றிதழ் தந்து பணியில் சேர்ந்த

3,000 ஆசிரியர்கள் 'டிஸ்மிஸ்'

பாட்னா. ஜூலை 11-

போலி கல்வி சான்றிதழ்கள் தந்து ஆசிரியர் பணியில் சேர்ந்த 3,000க்கும் மேற்பட்டோரை பணி யில் இருந்து நீக்க, பீஹார் அரசு முடிவு செய்துள்ளது.

பீஹாரில் முதல் வர் சாம்ராட் சவுத்ரி தலைமையில் பா.ஜ., ஐக்கிய ஜனதா தள ஆட்சி அமைந்துள்ளது. இங்கு, 2006 -15 வரையிலான காலத் தில், ஆசிரியர்கள் பலர், போலியான கல்வித் தகுதி சான்றிதழ்கள் தந்து பணியில் சேர்ந் ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

ராஜினாமா

இதையடுத்து, மாநில விஜிலென்ஸ் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இது தொடர்பான விசாரணையின்போதே, போலி சான்றிதழ்கள் வாயிலாக பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் சிலர் ராஜினாமா செய்த னர். விசாரணை முடிந்த மிதிலேஷ் திவாரி தும் அது தொடர்பான அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இந்நிலையில், பாட் னாவில் மாநில கல்வி அமைச்சர் மிதிலேஷ் திவாரி நேற்று கூறியதாவது:

ஆசிரியர்களாக நியமிக்கப்பட்ட பலர், போலி கல்லுாரிகள் வழங்கிய சான்றிதழ் களை சமர்ப்பித்திருப் பதும், வேறு சிலர் ஆசிரியர் பணியை பெறுவதற்கு போலி யான கல்வி தகுதியை பயன்படுத்தியிருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவ்வாறு சேர்ந்த 3,000க்கும் மேற்பட்ட ஆசிரியர் களை பணி நீக்கம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது.

அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும். கல்வித் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள் ளது. ஆசிரியர்கள் தங்கள் பணிக்காலத்தில் பெற்ற ஊதியம் மற்றும் கவுரவ ஊதியம் ஆகி யவற்றை வட்டியுடன் கல்வித் துறை திரும்பப் பெறும்.

நடவடிக்கை

ஒழுங்கு நடவ டிக்கை தொடங்குவ தற்கு முன்பே, ஒரு சில ஆசிரியர்கள் தங்கள் பணியை ராஜினாமா செய்திருந்தனர். அவர் கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மத்தியிலும், மாநிலத் திலும் ஆட்சி அமைத் துள்ள பா.ஜ., தலை மையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, ஊழலுக்கு எதி ராக பூஜ்ஜிய சகிப்புத் தன்மை கொள்கையை பின்பற்றுகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

.:.

No comments:

Post a Comment