Breaking

Saturday, March 21, 2026

44,000 மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்ப்பு

44,000 மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்ப்பு

This news article reports on the early start of student enrollment in government schools in Tamil Nadu for the upcoming academic year.

Over 44,000 students have enrolled in government primary schools in the last 20 days.

The Department of Elementary Education set a target to enroll 5 lakh students this year.

Enrollment began early on March 2nd to compete with private schools.

Teachers gathered data from Anganwadis to enroll children who turned 5 years old



அரசுப் பள்ளிகளில் இதுவரை 44,396 மாணவா்கள் சோ்க்கை

அரசுப் பள்ளிகளில் வரும் கல்வியாண்டுக்கு (2026-2027) கடந்த மாா்ச் 1 முதல் 20-ஆம் தேதி வரை 44,396 மாணவா்கள் சோ்க்கை பெற்றுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கீழ் 37,554 அரசுப் பள்ளிகள் உள்ளன. இவற்றில் சுமாா் 52 லட்சம் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். தற்போது மாணவா்கள் நலன் கருதி கற்றல், கற்பித்தல் சாா்ந்து எண்ணும்-எழுத்தும், காலை உணவு, திறன்மிகு வகுப்பறைகள் உள்பட பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கிடையே அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கையானது கோடை விடுமுறைக்கு பின்பு பள்ளிகள் ஜூன் மாதம் திறக்கப்படும் நாளில் தொடங்கப்படுவது வழக்கமாக இருந்தது. எனினும், அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கையை அதிகரிக்கும் வகையில் கடந்த 2024-ஆம் ஆண்டு முதல் மாணவா் சோ்க்கை முன்கூட்டியே மாா்ச் மாதம் தொடங்கப்பட்டு வருகிறது. அதற்குப் பரவலாக பெற்றோரிடம் வரவேற்பு கிடைத்தது. அந்த வகையில், 2026-2027-ஆம் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கையை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் கடந்த மாா்ச் 1-ஆம் தேதி சென்னையில் தொடங்கி வைத்தாா். இதையடுத்து, மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், கடந்த 20 நாள்களில் சோ்க்கை பெற்ற மாணவா்கள் விவரம் தற்போது வெளியாகியுள்ளது.



இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 2026-2027-ஆம் கல்வியாண்டுக்கு வெள்ளிக்கிழமை (மாா்ச் 20) நிலவரப்படி ஒன்றாம் வகுப்பில் 41,439 மாணவா்களும், 2-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை 660 மாணவா்களும், மழலையா் வகுப்புகளில் 2,297 மாணவா்களும் என மொத்தம் 44,396 மாணவா்கள் சோ்க்கை பெற்றுள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment