புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் - அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் விவரங்களை புதுப்பிக்க நடவடிக்கை - கருவூலத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவு
his newspaper article from July 9, 2026, instructs officials to update employee details for a new medical insurance scheme.
The insurance plan provides cashless treatment up to ₹7.5 lakh, with specialized coverage for critical illnesses up to ₹10 lakh
It covers government employees and teachers, providing coverage for a five-year period starting July 1, 2026.
Officials must submit a report by July 13 regarding the status of these data updates
புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம்
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் விவரங்களை புதுப்பிக்க நடவடிக்கை
கருவூலத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவு
சேலம், ஜூலை 9: புதிய மருத்துவ காப்பீட்டு திட் டத்திற்காக, அரசு ஊழி யர்கள், ஆசிரியர்களின் விவரங்களை புதுப்பிக்க கருவூலத்துறை அதிகாரி களுக்கு உத்தரவிடப்பட் டுள்ளது. தமிழகத்தில் பல்வேறு அரசு துறைகளின் கீழ் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக் கான புதிய மருத்துவ காப் பீடு திட்டம் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
வரும் 2031ம் ஆண்டு ஜூன் - வரை, 5 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும் - இத்திட்டத்தின் கீழ் அங் = கீகரிக்கப்பட்ட மருத்துவம் னைகளில் பணமில்லா முறையில் ரூ.7.50 லட்சம் வரை மருத்துவ சிகிச்சை பெறலாம்.
மேலும், 46 வகையான தீவிர நோய் களுக்கு ஒரு குடும்பத்திற்கு ரூ.12 லட்சம் வரை சிகிச்சை வழங்கப்படும். இத்திட் டத்தை செயல்படுத்துவ தற்கான பல்வேறு நடவ டிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக, அனைத்து வகை அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் விவரங் களை புதுப்பிக்க கருவூலத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கரு வூல கணக்குத்துறை அதி காரிகள் கூறியதா வது
தமிழகத்தில் அரசு ஊழி யர்கள் மற்றும் ஆசிரியர் களுக்கான புதிய மருத் துவ காப்பீட்டுத் திட்டம், 01/07/2026 முதல் 31/06/2031 வரை 5 ஆண்டுகளுக்கு நடைமுறைப்படுத்தப்பட் டுள்ளது. இதற்காக தகுதி யுள்ள அனைத்து ஊழியர் கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு ஐஎப்எச்ஆர்எம்எஸ் அடையாள எண் அடிப்ப டையிலான மின் அட்டை கள் வழங்கப்படவுள்ளன. இத்திட்டம் தொடங்கிய 60 நாட்களுக்குள், என்எச்ஐ எஸ் இணையதளம் மற்றும் ஐஎப்எச்ஆர்எம்எஸ் களஞ் சியம் செயலி மூலம் இந்த மின் அட்டையை பதிவிறக் கம் செய்து கொள்ள ஏற் பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மின் அட்டைகளை உருவாக்குவதற்கும், ஐஎப் எச்ஆர்எம்எஸ்-ல் பராம ரிக்கப்படும் ஊழியர் தர வுகள் முழுமையாகவும், துல்லியமாகவும் இருப் பதை அனைத்துப் பணம் எடுக்கும் மற்றும் வழங்கும் அலுவலர்களும் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே அனைத்துப் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களும், தங்களின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து ஊழியர்கள் விவரங்களை, ஐஎப்எச் ஆர்எம்எஸ் இணையதளத் தில் சரிபார்த்து, புதுப்பிக்க வேண்டும். குறிப்பாக, சம் பந்தப்பட்ட அரசு ஊழியர் கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்க ளின் ஆதார் விவரங்கள், அனைவரது சமீபத்திய புகைப்படம், அரசு ஊழி யர் மாற்றுத்திறனாளியாக இருப்பின், அதற்கான சான்றிதழ் விவரங்கள், தகுதியுள்ள குடும்ப உறுப் பினர்களின் மாற்றுத்திறன் சான்றிதழ் விவரங்கள், என்எச்ஐஎஸ் பதிவிற்குத் தேவைப்படும் தகுதியுள்ள பிற குடும்ப உறுப்பினர்க ளின் விவரங்களை புதுப் பிக்க வேண்டும். கணவன், மனைவி இருவரும் மாநில அரசின் கீழ் பணிபுரியும் பட்சத் தில். இளைய ஊழியர் இத்திட்டத்தின் பலனைப் பெறத் தகுதியுடையவர் ஆவார். இந்த புதுப்பித் தல் பணிகளை வரும் 15ம் தேதிக்குள் முடிக்க வேண் டியுள்ளதால், அனைத்து பணம் பெற்று வழங்கும் அலுவலர்களும், பதிவேற் றப்பட்ட விவரங்கள் துல் லியமானவை மற்றும் உரிய ஆவணங்களால் சரிபார்க் கப்பட்டவை என்பதை உறுதி செய்ய வேண்டும். இந்த புதுப்பித்தல் பணி கள் நிறைவடைந்த பிறகு, ஐஎப்எச்ஆர்எம்எஸ் பதி வேடுகள் புதுப்பிக்கப் பட்டு விட்டன என்பதை உறுதிப்படுத்தும் ஒரு நிறைவு அறிக்கையை, வரும் 13ம் தேதியன்றோ அல்லது அதற்கு முன் னரோ, அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்கப்பட வேண்டும், என உத்தரவி டப்பட்டுள்ளது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.



No comments:
Post a Comment