Breaking

Saturday, June 13, 2026

அரசு மகளிர் பள்ளி தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் - மாவட்ட கல்வி அலுவலர் நடவடிக்கை



அரசு மகளிர் பள்ளி தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் - மாவட்ட கல்வி அலுவலர் நடவடிக்கை Government Girls' School Headmistress Suspended – District Educational Officer Takes Action

பல் வேறு புகார்களின் பேரில் செங்கோட்டை அரசு மக ளிர் பள்ளி தலைமை ஆசி ரியை சஸ்பெண்ட் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரேணுகா உத்தர விட்டுள்ளார்.

செங்கோட்டையில் எஸ்.ஆர்.எம். அரசு மக ளிர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் ஒன்றாம் வகுப்பு பிளஸ் 2 வகுப்பு வரை உள்ளது. மிகவும் பிரபல மான இப்பள்ளியில் செங் கோட்டை மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளி யில் சமீபத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவி கள் தங்களது மாற்றுச் சான்றிதழ்களை வாங் குவதற்காக சென்றுள்ள னர்.

அப்போது மாணவிகளிடம் டிசியை வழங்குவ தற்கு தலைமை ஆசிரியை பணம் வாங்கியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக மாணவிகளின் பெற்றோர் தென் காசி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் முதன்மை கல்வி அலுவ லர் ரேணுகா, தற்போது மாற்றுச்சான்றிதழ் பெற்ற பள்ளி மாணவிகள், அவ ரது பெற்றோரிடம் ரக சியமாக விசாரணை மேற் கொண்டனர். தொடர்ந்து பள்ளி ஆசிரியர்கள், ஊழி யர்களிடமும் தனித்தனி யாக விசாரணை மேற் கொள்ளப்பட்டது. இந்த விசாரணையில் பள்ளி தலைமை ஆசி மாவட்ட கல்வி அலுவலர் நடவடிக்கை

ரியை ஜீவா மீதான குற்றச் சாட்டு நிரூபனமானது. இதைதொடர்ந்து அவரை தற்காலிக பணியிடை நீக் கம் செய்து தென் காசி மாவட்ட முதன்மை கல்வி அலு வ லர் ரேணுகா உத்தர விட்டுள்ளார். இந்த அதிரடி நடவடிக்கை பெற்றோர், பள்ளி மாண விகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தலைமை ஆசிரியர் ஜீவா

மேலும், பள்ளியில் நிலவி வரும் அடிப்படை பிரச்னைகளை சரிசெய்து மாணவிகளுக்கு தேவை யான அடிப்படை வசதி களை ஏற்படுத்த பள்ளி கல்வித்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மாணவிகள், பெற் றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

This image shows a Tamil-language newspaper clipping reporting on the suspension of a school headmistress in Sengottai.

The headline states that the Headmistress of the Government Girls School in Sengottai has been suspended following complaints.

District Educational Officer Renuka issued the suspension order for the teacher named Jeeva.

The report mentions investigations into allegations of soliciting money from students in exchange for certificates.

No comments:

Post a Comment