Breaking

Friday, March 20, 2026

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல், 23.4.2026 - தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர்களின் நலன் சார்ந்த கோரிக்கைகள் நிறைவேற்ற வேண்டுதல் சார்பு



This is an official letter from the Tamil Nadu Primary School Teachers' Federation addressed to the Chief Electoral Officer regarding requests for teachers and government staff involved in upcoming election duties.

The letter requests exemptions from election duties for employees with serious health conditions (such as cancer, heart disease, or post-surgery status), disabilities, pregnant women, and nursing mothers.

It asks that training sessions for polling staff not be scheduled on weekends or public holidays.

It requests that staff be assigned to polling stations within their own constituency This document is a letter from the Tamil Nadu Primary School Teachers' Federation addressing concerns regarding the deployment of teachers for election duties.

Teachers, particularly women, are required to travel 50 to 100 kilometers for election duty due to constituency assignments.

Teachers face difficulties obtaining food and water during the 12-hour duty period.

The federation requests transportation arrangements for women teachers and secure facilities at polling stations, including toilets and accommodation.

The letter requests that election officials be allowed to use postal ballots or the EDC method to vote and be exempted from tolls when using their own vehicles தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி

ஆசிரியர் கூட்டணி

பெறுநர்:

தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி மற்றும்

அரசு முதன்மைச் செயலாளர்

தலைமைச் செயலகம்

-600009

மதிப்பிற்குரிய அம்மா,

பொருள். தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல், 23.4.2026 - தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர்களின் நலன் சார்ந்த கோரிக்கைகள் நிறைவேற்ற வேண்டுதல் சார்பு

வருகிற 23.4.2026 அன்று நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலை சிறப்பாக நடத்தி முடிப்பதில் தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் பணி மகத்தானது. இத்தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களில் பெண்ணாசிரியர்கள் மற்றும் பெண் ஊழியர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. எனவே தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் மிகச் சிறப்பாகத் தேர்தல் பணிகளை மேற்கொள்ள ஏதுவாகவும், தேர்தல் பணியில் ஈடுபடும் பெண் அலுவலர்களின் நலன் கருதியும் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல் பணியினைச் சிறப்பாகச் செய்து முடித்திட கீழ்க்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பின் சார்பில் வேண்டுகிறோம்.

அரசு 1. சட்டமன்றத் தேர்தல் பணிக்காக அனைத்து ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களிடமிருந்து சுயவிவரப் படிவங்கள் பெறப்பட்டுள்ளன சுயவிவரப்படிவங்கள் வழங்கிய அனைவருக்கும் தேர்தல் பணியாணை வழங்காமல், தேர்தல் ஆணைய வழிகாட்டுதலின்படி தேர்தல் பணியிலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டியவர்களான புற்றுநோய், இதயநோய் மற்றும் சிறுநீரக அறுவைச் சிகிச்சை செய்துள்ளோர், தீவிர நோய்களால் பாதிக்கப்பட்டு தொடர் சிகிச்சையில் இருப்போர், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோருக்குத் தேர்தல் பணிகளிலிருந்து விலக்கு அளித்திட வேண்டுகிறோம். 2. வாக்குச்சாவடியில் பணிபுரியும் அலுவலர்களுக்கான தேர்தல் பயிற்சி வகுப்புகளை சனி மற்றும் ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை நாட்களில் நடத்துவதைத் தவிர்த்திட வேண்டுகிறோம்.

3. தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு அந்தந்த சட்டமன்றத் தொகுதிக்குள் உள்ள வாக்குச் சாவடியில் பணியாற்றும் வகையில் பணி ஆணை வழங்கிடவேண்டுகிறோம். அடுத்த சட்டமன்றத் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளில் பணியமர்த்தப்படுவதால் 50 கிலோ மீட்டர் முதல் 100 கிலோ மீட்டர் வரை பயணித்து பணியில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் குறிப்பாகப் பெண் ஆசிரியர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

4. தேர்தல் நாளன்று வாக்குச்சாவடிகளில் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு காலை,மதியம், இரவு உணவுகள் கூட சரியாக கிடைப்பதில்லை தொடர்ந்து 12 மணி நேரத்திற்கும் மேலாக குறித்த நேரத்தில் உணவு கிடைக்காமல் தேர்தல் பணியாற்ற வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் சர்க்கரை நோயாளிகள் உள்ளிட்டோர் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். எனவே தேர்தல் நாளன்று வாக்குச்சாவடிகளில் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு உரிய நேரத்தில் தரமான உணவு, குடிநீர் உள்ளிட்டவை கிடைத்திட மாவட்ட நிர்வாகம் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு உதவிட வேண்டுகிறோம்.

5. வாக்குச்சாவடிகளில் தேர்தல் பணிக்குச் செல்லும் அலுவலர்களில் பெரும்பாலோர் பெண்கள் என்பதால் அவர்கள் வாக்குச்சாவடிகளுக்கு செல்வதற்கும், தேர்தல் பணி முடித்து வீடு திரும்புதற்கும் ஏதுவாக வாகன வசதி செய்து தர மாவட்ட நிர்வாகம் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறோம் 6. தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து அலுவலர்களும் தங்களது ஜனநாயகக் கடமையைச் செவ்வனே நிறைவேற்றும் வகையில் தபால் வாக்குகள் மற்றும் EDC முறையில் வாக்குகள் செலுத்திட தாமதமின்றி உரிய நடவடிக்கை மேற்கொண்டு உதவிட வேண்டுகிறோம்.

7. வாக்குச்சாவடிகளில் தேர்தல் பணியாற்றும் அலுவலர்களுக்கு போதுமான அடிப்படை வசதிகளான கழிப்பறை,தண்ணீர்வசதி, பாதுகாப்பான தங்கும் வசதி போன்றவற்றை மாவட்ட நிர்வாகம் மூலம் செய்து தர உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டுகிறோம்.

8. வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் தேர்தல் அலுவலர்கள் நான்கு சக்கர வாகனங்களில் தேர்தல் பணிக்குச் செல்லும் போது சுங்கக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளித்திட தாங்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறோம்.

மேற்கண்ட வகையில் எமது மாநில அமைப்பின் கோரிக்கைகளை நிறைவேற்றிட தாங்கள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு,தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் மிகச் சிறப்பாக தங்கள் கடமையை ஆற்றிட உதவிடுமாறு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பின் சார்பில் தங்களைப் பணிவுடன் வேண்டுகிறோம்.

No comments:

Post a Comment