Breaking

Wednesday, March 18, 2026

1 முதல் 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கு ஏப்.17-க்குள் முழு ஆண்டு தேர்வு? பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் விளக்கம்



1 முதல் 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கு ஏப்.17-க்குள் முழு ஆண்டு தேர்வு? பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் விளக்கம்

ஏப்.17-க்குள் முழு ஆண்டு தேர்வு? - பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் விளக்கம்

தமிழகத்தில் 1 முதல் 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கான முழு ஆண்டுத் தேர்வுகளை ஏப்.17-க்குள் நடத்தி முடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 2-ம் தேதியும், 10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 11-ம் தேதியும் தொடங்கப்பட்டன. அதேபோல், 1 முதல் 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கான முழு ஆண்டு மற்றும் இறுதி பருவத் தேர்வுகள் ஏப்.10 முதல் 24-ம் தேதி வரை நடத்தப்படும் என பள்ளிக்கல்வித் துறை ஏற்கெனவே வெளியிட்ட வருடாந்திர நாட்காட்டியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையே தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்.23-ம் தேதி நடைபெறவுள்ளது. வகுப்பறைகள் வாக்குச்சாவடி மையங்களாக செயல்பட உள்ளதால், 1 முதல் 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கான தேர்வுகளை முன்கூட்டியே நடத்தி முடிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை தகவல் தெரிவித்திருந்தது. அதன்படி முழு ஆண்டுத் தேர்வுகளை ஏப்.17-க்குள் நடத்தி முடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது

இதற்கான தேர்வுக்கால அட்டவணை தயாரிக்கப்பட்டு துறையின் செயலர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் அறிவிப்பு வெளியாகும் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்


தமிழகத்தில் 1 முதல் 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கான முழு ஆண்டுத் தேர்வுகள் ஏப்ரல் 17-க்குள் நடத்தி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

சட்டப்பேரவைத் தேர்தல் காரணமாக, வாக்குச்சாவடி மையங்களாக செயல்படும் பள்ளிகளை ஏப்ரல் 20-க்குள் ஒப்படைக்க வேண்டியுள்ளதால், தேர்வுகள் முன்கூட்டியே முடிக்கப்பட உள்ளன

முக்கிய விவரங்கள்:

தேர்வு காலம்: ஏப்ரல் 10 முதல் 24-க்குள் நடத்த திட்டமிடப்பட்டிருந்தாலும், தேர்தல் பணியால் ஏப்.17-க்குள் முடிக்க ஆலோசிக்கப்படுகிறது

காரணம்: ஏப்ரல் 23-ல் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதால், வாக்குச்சாவடி பள்ளிகளை முன்கூட்டியே ஒப்படைக்க வேண்டிய சூழல்

புதிய அட்டவணை: 1-5 மற்றும் 6-9 வகுப்புகளுக்கான திருத்தப்பட்ட கால அட்டவணை ஓரிரு நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் மாதத்தில் தொடங்கி நடைபெற்று வருகின்றன

மாணவர்கள் ஏப்ரல் 17-ஐ இலக்காகக் கொண்டு தேர்வுக்குத் தயாராக அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment