அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆதார் புதுப்பிக்கும் பணி The process of updating Aadhaar for government school students is underway.
அரசு பள்ளி மாணவர்களுக்கான ஆதார் பயோமெட்ரிக் புதுப்பிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.
மத்திய, மாநில அரசுகள் மாணவர்களுக்கு வழங்கும் பல்வேறு கல்வி உதவித்தொகைகளை பெறுவதற்கும், வங்கி கணக்குகள் துவங்குவதற்கும் ஆதார் எண் மற்றும் அதன் இணைப்பு அவசியமாக உள்ளது.
1ف வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, 5 முதல் 16வயதுக்குட்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள். 5 முதல் 7 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் தங்களது முதல் முறை கட்டாய பயோ மெட்ரிக் பதிவை மேற்கொள்ள வேண்டும்.
அதேபோல், 15 முதல் 17 வயதுக்குட்பட்ட மாண வர்கள், தங்களது 2வது முறை கட்டாய பயோ மெட்ரிக் புதுப்பித்தலை மேற்கொள்ள வேண்டும். கோவையில் சுமார் 6 லட்சம் மாணவர்கள் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில்பயின்று வருகின்றனர். இவர்களில், 33 ஆயிரம் மாணவர்களிடம் ஆதார் எண் இல்லை; 51,370 மாணவர்களுக்கு ஆதார் பயோமெட்ரிக் 'அப்டேட்' செய்யப்படாமல் உள்ளது.
இந்நிலையில், மாவட்டத்தில் 15 ஒன்றியங்களில் செயல்படும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் ஆதார் விவரங்கள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன.
தற்போது 'எல்காட்' நிறுவனம் வாயிலாக இப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில், 11 பேர் கொண்ட குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
அதிகாரிகள் கூறுகையில், 'மாணவர்களுக்கான ஆதார் புதுப்பித்தல் பணிகள், 98 சதவீதம் இலவசமாகவே நடைபெறுகின்றன. ஏற்கனவே கட்டாய பயோ மெட்ரிக் விவரங்களை புதுப்பித்து, அதில் மேலும் திருத்தங் கள் மேற்கொண்டால் மட்டுமே, ரூ.125 கட்டணமாக வசூலிக்கபடும் என்றார்.
No comments:
Post a Comment