Breaking

Monday, December 29, 2025

பழங்குடியின பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சரிவு பள்ளி கல்வித்துறையுடன் இணைக்க வலியுறுத்தல்

பழங்குடியின பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சரிவு பள்ளி கல்வித்துறையுடன் இணைக்க வலியுறுத்தல் Emphasis to link decline in enrollment in tribal schools to school education

பழங்குடியின பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வெகுவாக சரிந்துள்ளதால், அப்பள்ளிகளை பள்ளி கல்வித்துறையுடன் இணைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உள்பட, 17 மாவட்டங்களில், 212 துவக்கப்பள்ளி, 49 நடு நிலை, 31 உயர்நிலை, 28 மேல் நிலை என, 320 உறைவிட பள்ளிகள் உள்ளன. ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை கட் டுப்பாட்டில் உள்ள அப்பள்ளிகளில், ஆண்டுதோறும் மாணவர் சேர்க்கை சரிந்து கொண்டே வருகிறது. குறிப்பாக 2014-15ல், 30 ஆயிரத்து, 933 ஆக இருந்த, அப்பள்ளிகளின் மொத்த மாணவர் எண்ணிக்கை, 10 ஆண்டுகளில் படிப்படியாக சரிந்து தற்போது, 24 ஆயிரத்து, 439 ஆக உள்ளது.

இதுகுறித்து, பெற்றோர், ஆசி ரியர்கள் கூறியதாவது:

மலைப்பகுதிகளில் வசிக்கும் குழந்தைகள், பள்ளிக்கு சென்று வர இயலாது என்பதால், அந் தந்த பகுதிகளில் தங்கி படிக்க, உறைவிட பள்ளிகள் தொடங்கப்பட்டன. ஆனால், ஆதி திராவிடர் நலத்துறை கட்டுப்பாட்டில் செயல்படுவதால், பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் கண்காணிப்பு, ஆய்வு செய்வதில்லை. பல ஆண்டாக ஆசிரியர்களும் நியமிக்கப்படாததால், 320 பள்ளிகளில், 500க்கும் மேற் பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. 60க்கும் மேற்பட்ட பள்ளிகள், ஓராசிரியர் பள்ளிக ளாக உள்ளன.


இதனால் மாணவர்களுக்கு கல்வித்தரம் மட்டுமின்றி, பாதுகாப்பும் வழங்க முடியாத சூழல் உள்ளது. மலைப்பகுதிகளில்அல்லது வனப்பகுதிகளை ஒட்டி, இப்பள்ளிகள் இருப்பதால், தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பது கூட சவாலாக உள்ளது.

பள்ளி கல்வித்துறையில், பள்ளிகளின் செயல்பாடுகளை கண்காணிக்க, வட்டாரம், மாவட்டம், முதன்மை என, பல்வேறு கல்வி அலுவலர்கள் உள்ளனர். ஆதிதிராவிடர் நலத் துறையில், மாவட்ட நல அலுவலர் மட்டுமே ஆய்வு அலுவலர். அவரும் முறையாக ஆய்வு செய்வதில்லை. இதனால் பெரும்பாலான நேரங்களில் வகுப்புகள் நடப்பதும் இல்லை. பழங்குடியின மாணவர்களுக்கு, கல்வி வழங்கும் வாய்ப்பை உருவாக்கி தரும், இப்பள்ளிகளை, பள்ளி கல்வித்துறை யுடன் இணைத்து, ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment