Breaking

Monday, December 29, 2025

NMMS - தேசிய வருவாய் திறன்வழி தேர்வுக்கு பயிற்சி!



தேசிய வருவாய் திறன்வழி தேர்வுக்கு அரையாண்டு விடுமுறையில் பயிற்சி NMMS - Training for the National Means-cum-Merit Scholarship Examination!

மத்திய அரசின் தேசிய வருவாய்வழித் திறன் தேர்வு (என்.எம்.எம். எஸ்.,) ஜன. 10ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இதில் பங்கேற்கும் மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறையில் சிறப்பு பயிற்சி வழங்க, மாவட்ட பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

மத்திய அரசின் இத் திட்டத்தின் கீழ். அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் வகுப்பு மாணவர்களுக்குத் திறனறித் தேர்வு நடத்தப்படுகிறது. இதில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, முதல் பிளஸ் வரை மாதம் தோறும் ரூ.1,000 கல்வி உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. தேர்ச்சி அதிகரிக்க கடந்த ஆண்டு இத்தேர்வில் கோவை மாவட்டத்தில், 229 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர், இந்த ஆண்டு தேர்ச்சி எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில், வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுடன், நான்கு கட்டங்களாக இணைய வழி ஆலோசனைகூட்டங்கன் நடத்தப்பட்டன. அதன்படி,

15 ஒன்றியங்களில் பள்ளி அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு பயிற்சி, இணையவழியில் அளிக்கப்படவுள்ளது. தேர்ந்தெடுக்கப் ட்ட மாணவர்களுக்கு, அரையாண்டு விடுமுறையில் பள்ளிகளில் ஆசிரியர்களை கொண்டு நேரடி சிறப்பு பயிற்சி வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. பெற்றோரின் விருப்பத்தின் பெயசிலேயே, இப்பயிற்சிகள் நடத்தப்படவுள்ளன.

7ம் வகுப்பின் முழு பாடப்பகுதிகள் மற்றும் சம் வகுப்பின் முதல் இரண்டு பருவப் பாடப்பகுதிகளிலிருந்து (அறிவியல், கணிதம், சமூக அறிவியல்) வினாக்கள் கேட்கப்படவுள்ளதால், அப்பகுதிகளில் பயிற்சி வழங்கப்படும். ஓ.எம்.ஆர்'தாளில் விடை அளிப்பது தொடர்பாகவும் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'தேர்வுக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால், மாணவர்களைத் தயார்படுத்த. இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை தினங்களை தவிர்த்து, மற்ற நாட்களில் ஆசிரியர்களை இப்பயிற்சி கொண்டு வழங்கத் திட்டமிட்டுள்ளோம், என்றனர்.

No comments:

Post a Comment