பிஎட் மாணவர்களின் விவரங்களை கல்லூரிகள் சமர்ப்பிக்க உத்தரவு
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், பிஎட் கல்லூரிகளுக்கு யுமிஸ் (UMIS) தளத்தில் மாணவர் விவரங்களை உடனடியாகப் புதுப்பிக்க உத்தரவிட்டுள்ளது, குறிப்பாக 2025-26 கல்வியாண்டில் சேர்ந்த மாணவர்களின் விவரங்களை டிசம்பர் 31, 2025க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், தாமதம் செய்தால் பல்கலைக்கழகம் பொறுப்பேற்காது என்றும், மேலும் 2022-23 மற்றும் 2023-24 கல்வியாண்டுகளின் விவரங்களைப் புதுப்பிக்காத 424 கல்லூரிகளை எச்சரித்துள்ளது.
முக்கிய அம்சங்கள்:
நோக்கம்: பிஎட் மற்றும் எம்எட் மாணவர்களின் விவரங்களை யுமிஸ் தளத்தில் புதுப்பித்தல்.
காலக்கெடு: 2025-26 கல்வியாண்டில் சேர்ந்த மாணவர்களுக்கு டிசம்பர் 31, 2025.
அறிவுறுத்தல்: பல்கலைக்கழக இணைப்பு அங்கீகாரம் பெற்ற அனைத்து கல்வியியல் கல்லூரிகளுக்கும்.
பழைய விவரங்கள்: 2022-23 மற்றும் 2023-24 கல்வியாண்டுகளில் படித்த 21,506 மாணவர்களின் விவரங்களை இன்னும் புதுப்பிக்காத 424 கல்லூரிகளுக்கும் அறிவுறுத்தல்.
விளைவு: கால தாமதம் அல்லது தவறுகளுக்கு பல்கலைக்கழகம் பொறுப்பேற்காது என பதிவாளர் ராஜசேகரன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். பிஎட் மாணவர்களின் விவரங்களை யுமிஸ் தளத்தில் கல்லூரிகள் உடனே புதுப்பிக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் கல் வியியல் பல்கலை. அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அந்த பல்கலைக்கழகத் தின் பதிவாளர் ராஜசேகரன், அனைத்து விதமான பிஎட் கல்லூரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை: பல்கலைக்கழக இணைப்பு அங்கீகாரம் பெற்ற அனைத்து கல்வியியல் கல்லூரிகளும், நடப்பு கல்வி யாண்டில் (2025-26) பிஎட், எம்எட் படிப் புகளில் சேர்ந்த மாணவர்களின் விவரங் களை வரும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் கட்டாயம் புதுப்பிக்க வேண்டும். இதில் கால தாமதம் அல்லது தவறு ஏற்பட்டால் பல்கலைக்கழகம் பொறுப்பேற்காது. இது தவிர 424 கல்வியியல் கல்லூரிகள் 2022-23, 2023-24-ம் கல்வியாண்டில் பிஎட், எம்எட் படித்து முடித்த 21,506 மாணவர்களின் விவரங்களை இதுவரை புதுப்பிக்கவில்லை. மாணவர் தேர்ச்சி பெற்றிருந்தாலும், தோல்வி அடைந்திருந்தாலும் அவர்களின் தகவல்களை சார்ந்த கல்வி நிறுவனங்கள் உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும். இவ் வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பிஎட் (B.Ed)மாணவர்கள் விவரம்: புதுப்பிக்க அறிவுறுத்தல் B.Ed students' details: Instructions to update the information.
கல்வியியல் கல்லுாரி மாணவர் விபரங்களை புதுப்பிக்க உத்தரவு
'யுமிஸ்' தளத்தில், பி.எட்., மாணவர்களின் விபரங்களை, கல்லுாரிகள் உடனடியாக புதுப்பிக்க வேண்டும் என, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, அந்த பல்கலையின் பதிவாளர் ராஜசேகரன், அனைத்து கல்வியல் கல்லுாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: பல்கலை இணைப்பு அங்கீகாரம் பெற்ற, அனைத்து கல்வியியல் கல்லுாரிகளும், 2025 - 26ம் கல்வியாண்டில், பி.எட்., எம்.எட்., சேர்ந்த மாணவ, மாணவியரின் விபரங்களை, வரும் 31ம் தேதிக்குள் கட்டாயம் புதுப்பிக்க வேண்டும்.
இதில், காலதாமதம் அல்லது தவறு ஏற்பட்டால், பல்கலை பொறுப் பேற்காது. மேலும், 424 கல்வியியல் கல்லுாரிகள், 2022 - 23, 2023 - 24ம் கல்வியாண்டுகளில், பி.எட்., - எம்.எட்., படித்து முடித்த, 21,506 மாணவ, மாணவியரின் விபரங்களை, இதுவரை புதுப்பிக்க வில்லை.
மாணவர் தேர்ச்சி பெற்றிருந்தாலும், தோல்வியடைந்திருந்தாலும், கவலை வேண்டாம். அவர்களின் விபரங்களை, கல்வி நிறுவனங்கள் உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


No comments:
Post a Comment