தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கியில் பணியாளர் தேர்வு அறிவிப்பு - விண்ணப்பிக்க கடைசி நாள் 31.12.2025
தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கியில் பணியாளர் தேர்வு அறிவிப்பு
கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் சென்னையைத் தலைமை யிடமாகக் கொண்டு செயல்படும் தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கியில் உத்தேசமாக காலியாகவுள்ள 50 உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு 24.01.2026 அன்று முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை மாநில ஆள்சேர்ப்பு நிலையத்தால் நடத்தப்படவுள்ளது. இத்தேர்வுக்கு தகுதிபெற்ற விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் http://www.tncoopsrb.in என்ற இணையதளம் வழியாக (through online only) மட்டுமே 31.12.2025 அன்று பிற்பகல் 5.45 மணி வரை வரவேற்கப்படுகின்றன. இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதி, கூட்டுறவுப் பயிற்சி, வயது வரம்பு, இட ஒதுக்கீடு, எழுத்துத் தேர்வுக்கான பாடத்திட்டம், தேர்வுக் கட்டணம் மற்றும் விண்ணப்பித்தல் தொடர்பான விவரங்களுக்கு மாநில ஆள்சேர்ப்பு நிலைய இணையதளத்தில் (http://www.tncoopsrb.in) வெளியிடப்பட்டுள்ள விரிவான அறிவிக்கையைக் காணவும்.
முகவரி
170, பெரியார் ஈ.வெ.ரா நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை - 600 010.
இணையதளமுகவரி : http://www.tncoopsrb.in
No comments:
Post a Comment