Breaking

Wednesday, December 17, 2025

DEO பிரதான தேர்வு - மார்ச் 12 முதல் 15-ம் தேதி வரை சென்னையில் நடை பெறும் - TNPSC



TNPSC DEO பிரதான தேர்வு - மார்ச் 12 முதல் 15-ம் தேதி வரை சென்னையில் நடை பெறும்

டிஎன்பிஎஸ்சி டிஇஓ முதல்நிலை தேர்வு முடிவு வெளியீடு The TNPSC DEO main examination will be held in Chennai from March 12th to 15th.

டிஎன்பிஎஸ்சி நடத்திய டிஇஓ முதல்நிலைத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. பிர தான தேர்வு மார்ச் மாதம் நடை பெறவுள்ளது.இது தொடர்பாக டிஎன்பி எஸ்சி தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் சண்முக சுந்தரம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மாவட்டக் கல்வி அதிகாரி (டிஇஓ) பதவி அடங்கிய குரூப் -1சி பிரிவில் முதல்கட்டமானமுதல்நிலைத் தேர்வு கடந்த 2024 ஜூலை 12-ம் தேதி நடை பெற்றது. இத்தேர்வின் முடிவு கள் தற்போது வெளியிடப் பட்டுள்ளன. அடுத்த கட்ட தேர் வான பிரதான (மெயின்) தேர் வுக்கு தற்காலிகமாக அனும திக்கப்பட்டுள்ள தேர்வர்களின் பதிவெண் பட்டியல் (பொதுப் பிரிவு மற்றும் பணியில் உள்ள ஆசிரியர் பிரிவு) தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc. gov.in) வெளியிடப்பட்டுள்ளது.

பிரதான தேர்வு 2026 மார்ச் 12 முதல் 15-ம் தேதி வரை சென்னையில் மட்டும் நடை பெறும். அந்த தேர்வுக்கு தகுதி பெற்றுள்ள தேர்வர்கள், தேர் வுக் கட்டணம் ரூ.200-ஐ டிசம் பர் 15 முதல் 19-ம் தேதி வரை ஆன்லைனில் செலுத்தலாம்.

No comments:

Post a Comment