Breaking

Wednesday, December 17, 2025

தமிழ்நாடு அரசில் கள உதவியாளர் வேலை; டிகிரி அவசியமில்லை - விண்ணப்பிக்க கடைசி நாள் 29.12.2025



தமிழ்நாடு அரசில் கள உதவியாளர் வேலை; டிகிரி அவசியமில்லை - விண்ணப்பிக்க கடைசி நாள் 29.12.2025 Field Assistant job in the Tamil Nadu government; degree not required - Last date to apply: 29.12.2025

தமிழ்நாடு அரசில் கள உதவியாளர் வேலை; டிகிரி அவசியமில்லை

தமிழ்நாடு பொது சுகாதாரத்துறையில் கீழ் உள்ள காலிப்பணியிடங்கள் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (MRB) மூலம் நிரப்பப்பட்டு வருகிறது.

அதன்படி, இந்த வருடத்திற்கான பல்வேறு பதவிகளில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியானது. அதனைத்தொடர்ந்து, பெரிதும் எதிர்பார்த்த கள உதவியாளர் பதவிக்கு 41 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கள உதவியாளர் பதவியில் உள்ள 41 காலிப்பணியிடங்கள் பொதுப் பிரிவு - 9, பிசி - 10, பிசி(எம்)- 1, எம்பிசி/ டிஎன்சி - 5, எஸ்சி - 13, எஸ்டி 13 என நிரப்பப்படுகிறது. வயது வரம்பு: 01.07.2025 தேதியின்படி, வயது வரம்பு நிர்ணயிக்கப்படுகிறது. இப்பணியிடங்களுக்கு குறைந்தபட்சம் 18 வயது இருக்க வேண்டும். அதிகபடியான வயது வரம்பு என பிரிவிற்கு ஏற்ப நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொதுப் பிரிவிற்கு 32 வயது வரையும், மாற்றுத்திறனாளிகளுக்கு 42 வயது வரையும், முன்னாள் ராணுவத்தினருக்கு 48 வயது வரையும் உள்ளன. எஸ்சி, எஸ்டி, எஸ்சிஏ, பிசி, பிசிஎம், எம்பிசி மற்றும் டிஎன்சி ஆகிய பிரிவினருக்கு உச்ச வயது கிடையாது. அதே போன்று, கணவரை இழந்த பெண்களுக்கு எந்த பிரிவினருக்கும் வயது வரம்பு கிடையாது.

கல்வித்தகுதி: எம்ஆர்பி மூலம் நிரப்பப்படும் கள உதவியாளர் பதவிக்கு 12-ம் வகுப்பு தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மருத்துவ ஆய்வக தொழில்நுட்பத்தில் 1 வருட சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும். நல்ல உடல்நலன், கண் திறன் பெற்றிருக்க வேண்டும். வெளியில் சென்று பணியாற்ற தயாராக இருக்க வேண்டும்.கல்வித்தகுதி என்பது 09.12.2025 தேதியின்படி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கள உதவியாளர் பதவிக்கு ஆர்வமாக உள்ளவர்கள் அவர்களின் விவரங்களை https://mrb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் அளித்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக் கட்டணமாக ரூ.600 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் கணவரை இழந்த பெண்கள் ரூ.300 மட்டும் செலுத்தினால்

போதுமானது பேப்பர் சாந்த கட்டணம் செலுத்தக் கடைசி நாள் 29.12.2025

No comments:

Post a Comment