Breaking

Tuesday, December 23, 2025

தமிழ்நாடு அரசு போட்டித் தேர்வுக்கான பயிற்சி வழங்குதல் - அரசு அறிவிப்பு

தமிழ்நாடு அரசு போட்டித் தேர்வுக்கான பயிற்சி வழங்குதல் - அரசு அறிவிப்பு

தமிழ்நாடு அரசு போட்டித் தேர்வுகள் பயிற்சி மையம் சென்னை - படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெரும் வகையில் போட்டித் தேர்வுக்கான பயிற்சி வழங்குதல் - அரசு அறிவிப்பு



தமிழ்நாடு அரசின் அகில இந்திய குடிமைப்பணி பயிற்சி மையம் மூலம் நடத்தப்படும் இந்த இலவசப் பயிற்சி வகுப்புகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே உள்ள தகவல்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்:

பயிற்சி மையங்கள்:

சர் தியாகராயா கல்லூரி, பழைய வண்ணாரப்பேட்டை, சென்னை (500 இடங்கள்).

மாநிலக் கல்லூரி, சேப்பாக்கம், சென்னை (300 இடங்கள்).

பயிற்சி நேரம்: பிற்பகல் 2.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை (வாராந்திர வேலை நாட்களில்).

கால அளவு: 6 மாதங்கள். விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுள்ள ஆர்வலர்கள் பயிற்சித் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான civilservicecoaching.com வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

முக்கிய குறிப்புகள்:

பயிற்சியில் சேர விரும்புவோர் குறிப்பிட்ட கல்வித் தகுதி மற்றும் வயது வரம்பு பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு அனுபவம் வாய்ந்த வல்லுநர்களைக் கொண்டு பயிற்சிகள் மற்றும் மாதிரித் தேர்வுகள் நடத்தப்படும்.

கூடுதல் விவரங்களுக்கு மற்றும் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்ய தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இணையதளத்தைப் பார்வையிடவும்.

போட்டித் தேர்வுகள் பயிற்சி மையம், சென்னை.

படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறும் வகையில் TNPSC, SSC, IBPS, RRB, etc., C

TNPSC மற்றும் SSC, IBPS, RRB ஆகிய முகமைகள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆர்வலர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் இயங்கும் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களான சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சர் தியாகராயா கல்லூரி வளாகத்தில் 500 ஆர்வலர்களுக்கும் மற்றும் சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள மாநிலக் கல்லூரி வளாகத்தில் 300 ஆர்வலர்களுக்கும் கட்டணமில்லா பயிற்சிகள் வழங்கப்படுகிறது. தற்போது மேற்படி போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் ஆர்வலர்களுக்கான பயிற்சி வகுப்புகளுக்கு இணைய வழியாக விண்ணப்பங்கள் பெற்று, சேர்க்கை நடைபெற உள்ளது பயிற்சி வகுப்புகள் பிற்பகல் 2.00 மணி முதல் 5.00 மணிவரை ஆறு மாத காலம் வாராந்திர வேலை நாட்களில் நடைபெற உள்ளது. பயிற்சி வகுப்புகளில் சேர விரும்பும் ஆர்வலர்கள் குறைந்த பட்சம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதோடு 01-01-2026 அன்று 18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும். மேற்படி போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களில் உணவும் தங்கும் வசதிகளும் இல்லை.

பயிற்சியில் சேரவிரும்பும் ஆர்வலர்கள் www.cecc.in என்ற வாயிலாக 22.12.2025 முதல் 05.01.2026 வரை விண்ணப்பிக்கலாம். பயிற்சி வகுப்புகளில் சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்களை மேற்குறிப்பிட்ட இணையதள முகவரியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 044-25954905 மற்றும் 044-28510537 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில், தமிழக அரசால் நடைமுறைபடுத்தப்பட்டுள்ள இனவாரியான இடங்களுக்கு ஏற்ப ஆர்வலர்கள் தேர்வு செய்யப்பட்டு தேர்வர்களின் விவரங்கள் மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் வெளியிடப்படும் என்பதைத் தெரியப்படுத்திக்கொள்கிறேன்.

No comments:

Post a Comment