Breaking

Tuesday, December 23, 2025

சிறுபான்மை கல்வி நிறுவங்களில் ஆசிரியர் நியமனம் குறித்து மேலும் இரண்டு அறிவிப்புகள்!!!



சிறுபான்மை கல்வி நிறுவங்களில் ஆசிரியர் நியமனம் குறித்து மேலும் இரண்டு அறிவிப்புகள்!!! Two more announcements regarding teacher appointments in minority educational institutions!!!

சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்களை தேர்வு செய்வது குறித்த முக்கிய அரசாணையில் கையெழுத்திட்டுள்ளதாக முதலமைச்சர் அறிவிப்பு - சிறுபான்மை கல்வி நிறுவங்களில் ஆசிரியர் நியமனம் குறித்து மேலும் இரண்டு அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளார்

முதலமைச்சர் - நாள்: 20.12.2025 - பக்கம் 9, 10 & 11. முதல் அறிவிப்பு

சிறுபான்மை கல்வி நிறுவனங்களின் ஆசிரியர் தேர்வு கமிட்டியில், அந்தந்த நிறுவனங்களின் பிரதிநிதிகள் மட்டுமே இருந்து ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான அரசாணையில் கையெழுத்திட்டுத்தான் இந்த நிகழ்ச்சிக்கு நான் வந்திருக்கிறேன்.

இரண்டாவது அறிவிப்பு

ஆசிரியர் தகுதித் தேர்வு பிரச்சனையில், சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் சந்திக்கின்ற சிரமங்களைப் பற்றி என்னிடம் நேரடியாக கோரிக்கை வைத்ததை தொடர்ந்து, அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தினேன். அதைத் தொடர்ந்து, அரசு வழக்கு விசாரணையை நீட்டிப்பதற்குப் பதிலாக, இந்த விவகாரம் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசால் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற்றோம். இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, TET தேர்வு தொடர்பான அரசியலமைப்புச் சட்ட கேள்வி குறித்து, மாண்பமை உச்ச நீதிமன்றம் ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வு ஆராய உத்தரவிட்டிருக்கிறது. இந்த அணுமுறையால், சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் ஆயிரத்து 439 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பதை மகிழ்ச்சியோடு நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

CLICK HERE TO DOWNLOAD சிறுபான்மை கல்வி நிறுவங்களில் ஆசிரியர் நியமனம் குறித்து மேலும் இரண்டு அறிவிப்புகள் PDF

No comments:

Post a Comment