ITI training center in a government school - All India Education Protection Committee அரசு பள்ளியில் ஐடிஐ பயிற்சி மையம் - அகில இந்திய கல்விப் பாதுகாப்பு கமிட்டி அரசு பள்ளியில் ஐடிஐ பயிற்சி மையம்
அகில இந்திய கல்விப் பாதுகாப்பு கமிட்டி வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது:
அரசுப் பள்ளிகளில் தொழில் துறை பயிற்சி மையங்கள் (ஐடிஐ) அமைப்பது தொடர்பான வழி காட்டுதல்கள் சமீபத்தில் பள்ளிக் கல்வித் துறையால் வெளியிடப்பட்டன. ஏற்கெனவே அரசுப் பள்ளி களில் போதிய கட்டமைப்பு வசதி இல்லாமலும், ஆசிரியர் பற்றாக் குறை பிரச்சினைகளும் இருக்கின் றன. அதனுடன், உயர்கல்வி பெறு வதில் மாணவர்களுக்கு ஆர்வ மின்மை, குடும்பச்சூழல், சமூகப் பிரச்சினைகளால் இடைநிற்றல் ஏற்படுதல், சேர்க்கை குறைதல் என பல்வேறு சிக்கல்களை அரசுப் பள்ளிகள் சந்தித்து வருகின்றன. எனவே, அரசு பள்ளிகளை தரப்படுத்தி, ஏழை மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்புகளை பெரு மளவில் வழங்க வேண்டும். அதற்கு பதிலாக பள்ளிகளுக்குள்ளேயே தொழில் பயிற்சி மையங்களை அமைத்தால், உயர்கல்வியைப் பெறவேண்டிய நமது மாணவர்கள் அடிப்படைத் தொழில் திறன்களை மட்டுமே பெற்று, வேலையாட்களாக உருவாகும் சூழல் ஏற்படும்.
எனவே, இந்த முடிவைக் கைவிட்டு, போதுமான ஆசிரியர்களை நிரந்தர அடிப்படையில் நியமனம் செய்து, மாணவர் சேர்க் கையை அதிகரித்து, பள்ளிக் கல்வி அமைப்பை உறுதிப்படுத்த வேண்டும். வேறு இடங்களில் ஐடிஐக்களை தொடங்க தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment