Breaking

Wednesday, December 17, 2025

முழு எழுத்தறிவு பெற்ற மாநிலமாகிறது தமிழகம் - பள்ளிக் கல்வித் துறை தகவல்



Tamil Nadu is on the verge of becoming a fully literate state, according to information from the School Education Department.

The "New India Literacy Program" has been implemented across 38 districts since 2022, targeting those over 15 years old who cannot read or write.

The goal for the current academic year (2025-2026) was to educate 15,00,309 individuals.

Two phases of basic literacy tests have been conducted for identified learners.

The state is expected to be declared fully literate once the central government releases the test results.

முழு எழுத்தறிவு பெற்ற மாநிலமாகிறது தமிழகம்

பள்ளிக் கல்வித் துறை தகவல்

சென்னை புதிய பாரத தமிழகத்தில் நடைபெற்ற அடிப் படை எழுத்தறிவுத் தேர்வு முடி வுகளை மத்திய அரசு விரைவில் வெளியிட்ட பிறகு, தமிழகத்தை முழு எழுத்தறிவு பெற்ற மாநி லமாக அறிவிக்க பிரகாசமான வாய்ப்பு உள்ளது என பள்ளிக் கல் வித் துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழக பள்ளிக் கல்வித் துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் இயக்குநர் ச.சுகன்யா திங்கள்கிழமை வெளி யிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் 15 வயதுக்கு மேற் பட்ட எழுதப் படிக்கத் தெரி யாத அனைவருக்கும் அடிப் படை எழுத்தறிவுக் கல்வி வழங் கும் பொருட்டு புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் 38 மாவட் டங்களிலும் 2022-ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வரு கிறது.

அந்த வகையில் நிகழ் கல் வியாண்டில் (2025-2026) மத்திய கல்வி அமைச்சக திட்ட ஒப்பு தல் குழுவின் அறிக்கையின்படி 15 லட்சத்து 309 எழுதப் படிக்கத் தெரியாதோர் எண்ணிக்கை இலக் காக நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து முதற்கட்டமாக 5 லட்சத்து 37 ஆயிரத்து 869 கற் போர் கண்டறியப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு அவர்களுக்கு கடந்த ஜூன் 15-ஆம் தேதி அடிப் படை எழுத்தறிவுத் தேர்வு நடத் தப்பட்டு சான்றிதழும் வழங்கப் பட்டது.

இரண்டாம் கட்டமாக 9 லட்சத்து 63 ஆயிரத்து 169 கற் போர் கண்டறியப்பட்டு, அவர் கள் 39 ஆயிரத்து 250 எழுத்தறிவு மையங்களில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு உரிய பயிற்சி அளிக் கப்பட்டு கடந்த ஞாயிற்றுக்கி ழமை (டிச.14) அடிப்படை எழுத் தறிவுத் தேர்வு நடத்தப்பட்டது.

நிகழ் கல்வியாண்டில் நிர்ண யிக்கப்பட்ட இலக்கான 15 ஆயி ரத்து 309 கற்போரை விட கூடுத லாக 733 பேர் தேர்வெழுதியுள்ள னர்.

தமிழகத்தை முழு எழுத்தறிவு பெற்ற மாநிலமாக அறிவிப்பதை எதிர்நோக்கி இத்திட்டம் செயல் படுத்தப்பட்டது. இத்தேர்வின் தேர்ச்சி முடிவுகள் மத்திய அரசின் சார்பில் வெளியிடப்பட்ட பின் னர் தமிழகத்தை முழு எழுத்தறிவு பெற்ற மாநிலமாக அறிவிக்க பிர காசமான வாய்ப்பு உள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி படிப்பை தவறவிட்ட வயது வந்தோருக்கு கல்வி அளிக் கும் உல்லாஸ்' என்ற புதிய பாரத எழுத்தறிவு திட்டம் மத்திய அரசு சார்பில் நாடு முழுவதும் செயல்ப டுத்தப்பட்டு வரும் நிலையில் இது வரை மிஸோரம், கோவா, திரி புரா, இமாச்சல் ஆகிய மாநிலங் கள் முழு எழுத்தறிவு பெற்ற மாநி லங்களாக அறிவிக்கப்பட்டுள் ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment