Breaking

Saturday, December 27, 2025

ஏ.ஏ.ஒய்.,மற்றும் பி.எச். எச்., குடும்ப அட்டைதாரர்கள் வரும் 31ம் தேதிக்குள் கை ரேகை பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தல்



ஏ.ஏ.ஒய்.,மற்றும் பி.எச். எச்., குடும்ப அட்டைதாரர்கள் வரும் 31ம் தேதிக்குள் கை ரேகை பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தல் A.A.Y. and B.H. H. Family Card Holders are advised to register their fingerprints by the 31st.

நீலகிரி மாவட்டத்தில் ரேசன் கடைகள் மூலம் அத்தி யாவசிய பொருட்கள் பெற்று வரும் குடும்ப அட்டைதாரர் கள் வரும் 31ம் தேதிக்குள் கை ரேகை பதிவு செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளதாவது- நீலகிரி மாவட்டம் அனைத்து வட்டங்களிலும் பொது விநியோக திட்டத் தின் கீழ் அத்தியாவசிய பொருட்கள் பெற்று வரும்ஏஏஒய்., மற்றும் பிஎச்எச்., குடும்ப அட்டைதாரர்கள் தங் கள் குடும்ப அட்டையில் உள்ள அனைத்து குடும்ப உறுப்பினர்களின் கை ரேகை யினை வரும் 31ம் தேதிக்குள் ரேசன் கடையில் உள்ள பிஒ எஸ்., இயந்திரத்தில் பதிவு செய்திட வேண்டும். வேலை நாட்களில் தாங்கள் பொருட் கள் பெறும் ரேசன் கடைக்கு நேரில் சென்று குடும்பத்தில் இதுவரை கைரேகை பதிவு செய்து கொள்ளாதவர்கள்தங்களது கைவிரல் ரேகை யினை பதிவு செய்து கொள் ளலாம். பிற மாநிலம், பிற மாவட்டங்களில் வேலை நிமிர்த்தமாக தங்கி உள்ளவர் கள் அவர்களுக்கு அருகாமை யில் உள்ள ரேசன் கடையில் G குடும்ப அட்டை நகலுடன் சென்று கைவிரல் ரேகை யினை பதிவு செய்து கொள்ள வேண்டும். இவ் வாறு மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment