கல்வி உதவித்தொகை விண்ணப்பங்கள் வரவேற்பு Applications for educational scholarships are invited.
அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீட்டின்கீழ் பயிலும் பிற்படுத்தப் பட்ட (பி.வ.), மிகப்பிற்படுத்தப்பட்ட (மி.பி.வ) / சீர்மரபினர் (சீ.ம) பிரிவைச் சார்ந்த மாணவ/ மாணவியருக்கு பிரதம மந்திரி பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை 2 (PM YASASVI Postmatric Scholarship) திட்டம் கீழ்க்கண்ட நிபந்தனைகளின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோர், செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மிகப்பிற்படுத்தப்பட்டோர் (ம) சிறுபான்மையினர் நலத்துறை மூலம் வருடந்தோறும் 2025-26 ஆம் கல்வியாண்டில் மேற்படி கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு, மாணவ / மாணவியருக்கு கல்லுாரி மூலம் வழங்கப்பட்டுள்ள UMIS (University Management Information System) மூலம் https://umis.tn.gov.in/ என்ற எண் இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. மாணாக்கர்கள் தாங்கள் பயிலும் கல்லுாரியில் கல்வி உதவித்தொகைக்கு என உள்ள ஒருங்கிணைப்பு அலுவலரை~ (Institution Nodal Officer) அணுகி இணையதளத்தின் மூலம் கல்வி உதவித்தொகைக்கு 31.12.2025 அன்றுக்குள் விண்ணப்பிக்கலாம்.
கல்வி உதவித்தொகை தொடர்பான சந்தேகங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டாம் தளத்தில் உள்ள அறை எண்.304, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில், அலுவலக நேரங்களில் அணுகி விவரங்களை பெற்றுக்கொள்ளலாம் எனவும், தகுதியான அனைத்து மாணவர்களும் மேற்படி திட்டத்தின்கீழ் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment