Breaking

Saturday, December 27, 2025

தேசிய திறனாய்வு தேர்வை பிப்ரவரியில் நடத்த ஆசிரியர்கள், மாணவர்கள் கோரிக்கை



தேசிய திறனாய்வு தேர்வை பிப்ரவரியில் நடத்த ஆசிரியர்கள், மாணவர்கள் கோரிக்கை Teachers and students are requesting that the National Talent Search Examination be conducted in February.

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகைத் திட்டத் தேர்வை கடந்த ஆண்டுகளைப்போல் பிப்ரவரி மாதத்தில் நடத்த ஆசிரியர்கள், மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நடப்பு கல்வியாண்டுக்கான தமிழ்நாடு அரசின் அங்கீகாரம் பெற்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜன.10-ல் தேசிய வருவாய் வழி மற்றும் திறன்படிப்பு உதவித் தேர்வு நடைபெறுவதாக அரசுத் தேர்வுகள் இயக்குநரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இந்தத் தேர்வை வழக்கம்போல்ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் நடத்தியதுபோல் இந்த ஆண்டும் பிப்ரவரியில் நடத்த வேண்டும் என ஆசிரியர்கள், மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கூறியதாவது: ஆண்டுதோறும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் உதவித்தொகை தேர்வு 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி இறுதி வாரத்தில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இதற்கு மாறாக ஜன.10-ல் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அரையாண்டுத் தேர்வில் மாணவர்கள் விடுமுறையில் உள்ளனர்.

விடுமுறை முடிந்து ஒரு சில தினங்களிலேயே தேர்வு என்பதால் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பயிற்சியளிக்கப் போதுமான நாட்கள் இல்லை.

இதனால், கிராமப்புற மாணவர்கள் தேர்வை எதிர்கொள்வது சிரமமானதாக இருக்கும். இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றால் 4 ஆண்டு களுக்கு மாதம் ரூ.1000 வீதம் ரூ.48,000 உதவித்தொகையாகக் கிடைக்கும். எனவே, கிராமப்புற மாணவர்கள் தேர்ச்சியடைய ஏதுவாகப் போதுமான அவகாசம் கொடுத்து தேர்வு நடைபெறும் நாளை வழக்கம்போல் பிப்ரவரி இறுதி வாரத்தில் நடத்த வேண்டும். என வலியுறுத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment