The event where the views discussed at the consultation meeting on the Teacher Eligibility Test were submitted to the Chief Minister
ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து கருத்து கேட்பு கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட கருத்துக்களை முதலமைச்சர் அவர்களிடம் சமர்ப்பித்த நிகழ்வு
நேற்றைய சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து கருத்து கேட்பு கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட கருத்துக்களை
மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களும்
மாண்புமிகு பாராளுமன்ற உறுப்பினர் மூத்த வழக்கறிஞர் திரு.வில்சன் அவர்களும்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் சமர்ப்பித்த நிகழ்வு
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று (22.11.2025) சென்னை, அண்ணா அறிவாலயத்தில், மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் சந்தித்து, 2011-ஆம் ஆண்டிற்கு முன்பு பணி நியமனம் பெற்று தற்போது ஆசிரியராக பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களும் கட்டாயம் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து தமிழ்நாடு அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது குறித்தும், ஆசிரியர்களிடையே ஏற்பட்டுள்ள அச்ச உணர்வினை போக்கும் வகையில் நேற்று தனது தலைமையில் பல்வேறு ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது குறித்தும், அக்கூட்டத்தில் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் தெரிவித்த கருத்துகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் தெரிவித்து எடுக்கவேண்டிய தொடர் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை பெற்றார். அப்போது மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், ஆசிரியர்களின் நலன் காத்திட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், திராவிட மாடல் அரசு எந்த சூழ்நிலையிலும் ஆசிரியர்களைக் கைவிடாது என்றும் உறுதியளித்தார். இச்சந்திப்பின்போது, நாடாளுமன்ற உறுப்பினரும், மூத்த வழக்கறிஞருமான திரு. பி. வில்சன் அவர்கள் உடனிருந்தார்.

No comments:
Post a Comment