தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் அறிக்கை 08.07.2026
இடம்: சென்னை
08.07.2026
TET - ஆசிரியர்களின் பிரச்சனைகளை - வெற்றிகரமாக தீர்த்து வைத்திட - நமது பேரியக்கம்
| சென்னை உயர்நீதிமன்றத்தின் மூலம் மகத்துவம் வாய்ந்த வரலாற்று சாதனைகளைப் புரிந்து வருகிறது - பெருமைப்படுகிறோம்
இனிய இருபால் ஆசிரியப் பெருமக்களே ! நமது பேரியக்க காவலர்களே!!
அனைவருக்கும் அன்பார்ந்த இனிய வணக்கங்கள்.
20, 25 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வரும் மூத்த ஆசிரியர்களும், ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெற்றால் தான் ஆசிரியர் பணியில் நீடிக்க முடியும் என்றும், பதவி உயர்வு பெற்றிட முடியும் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
அந்த தீர்ப்பை ஒட்டி, தமிழ்நாட்டில் 4.7.2026 மற்றும் 5.7.2026 ஆகிய இரண்டு நாட்கள் இடைநிலை ஆசிரியர்களுக்கும், பட்டதாரி ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தகுதித் தேர்வுகள் நடைபெற்றன.
அந்த தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற SC/ST ஆசிரியர்கள் 60 பெண்கள் பெற்றாக வேண்டும் என்றும், BC / MBC / OBC ஆசிரியர்கள் 75 மதிப்பெண்கள் பெற்றாகவேண்டும் என்றும், O.C. பிரிவு ஆசிரியர்கள் 90 மதிப்பெண்கள் பெற்றாக வேண்டும் என்றும் கடந்த அரசு அரசாணைப்பிறப்பித்தது.
இது ஆசிரியர்களின் தேர்ச்சியை மேலும் சிக்கலாக்கியது. மேலும் ஆசிரியர்கள் மத்தியில் தேவையில்லாத பல குழப்பங்களையும், வேறுபாடுகளையும் உருவாக்கியது. இது மிகுந்த வேதனை தரும் நிகழ்வாகும். இப்போது TET எழுதும் - பணி மூத்த ஆசிரியர்கள் அனைவரும் பணி நியமனம் செய்யப்பட்ட பொழுதே, இன சுழற்சி அடிப்படையில்தான் தேர்வு செய்யப்பட்டார்கள் என்றும், ஆகவே இப்போது மீண்டும் இன சுழற்சி முறையில் TET தேர்ச்சிக்கு மதிப்பெண்கள் வழங்கப்படவேண்டிய அவசியமில்லை. அனைவருக்கும் TET- இல் தேர்ச்சி பெற குறைந்தபட்ச மதிப்பெண் 55 வாங்கினால் போதும் என்ற நிலைப்பாட்டை நமது பேரியக்கம் மேற்கொண்டது.
மேலும் TET தேர்வு எழுதும் ஆசிரியர்களுக்கு, அவர்கள் பணியாற்றிய காலத்திற்கு மதிப்பளிக்கும் வகையில், பணிக்காலத்திற்கு மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்றும்; அவர்கள் நடத்தும் பாடங்களில் இருந்துதான் TET-க்கான கேள்விகள் கேட்கப்படவேண்டும் என்றும், அவர்களுக்கு தொடர்பில்லாத பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கக் கூடாது என்பதும் நமது நிலைபாடாகும்.
மேற்கூறிய இப்பிரச்சனைகளுக்கு தீர்வு காணக்கூடிய வகையில் இம்மாதம் 4, 5 தேதிகளில் நடைபெற்ற TET தேர்வின் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படவேண்டும் என்றும், அதுவரையில் இந்த TET தேர்வின் முடிவுகளை வெளியிடாமல் நிறுத்தி வைக்கவேண்டும் என்ற நமது மாநில கழகத்தின் நிலைப்பாட்டை நீதிமன்றத்தின் மூலமாக நிலைநாட்டிட வேண்டும் என்று மாநிலக் கழகம் வழிகாட்டியதன் அடிப்படையில் நமது மாநிலப் பொறுப்பாளர்கள் மற்றும் சென்னை மாவட்டப் பொறுப்பாளர்கள் (திரு. M.விஜயசாரதி, திருமதி. S.M.கிருஷ்ணவேணி, திரு.K.சாந்தகுமார், திரு.V.ஜோசப் பெனிடிக் ரவிராஜ் ஆகியோர்) சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
இந்த வழக்கை இன்று (8.7.2026) விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், நமது கோரிக்கையை ஏற்று, 4 மற்றும் 5 ஜூலை 2026 தேதிகளில் நடைபெற்ற TET தேர்வின் முடிவுகளை வெளியிடுவதை 24.7.2026 வரை நிறுத்தி வைக்கவேண்டும் என்றும், அடுத்த விசாரணை 24.7.2026 அன்று நடைபெறும் என்றும், ஆணை பிறப்பித்துள்ளது என்ற நற்செய்தியை உங்கள் அனைவரின் கனிவான கவனத்திற்கு கொண்டு வருகிறோம். மேற்கூறிய ஆணையை பிறப்பிக்கும்போது, பணியில் இருக்கும் மூத்த ஆசிரியர்களுக்கு -பணிக்கால அடிப்படையில் ஏன் சலுகைகள் வழங்கக்கூடாது? என்று மாண்புமிகு நீதிபதி அவர்கள் எழுப்பியுள்ள கேள்வி நமக்கெல்லாம் புதுத் தெம்பையும், உற்சாகத்தையும், வாரி வழங்கியுள்ளது என்பதையும் மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
The document describes a recent court ruling regarding Teacher Eligibility Tests (TET) for teachers with 20-25 years of experience in Tamil Nadu.
It highlights minimum score requirements for different community groups: 60 marks for SC/ST, 75 for BC/MBC/OBC, and 90 for O.C.. The text suggests that teachers already appointed based on communal rotation should not have to retake the TET to qualify for promotions. Court Ruling on TET Results: The Chennai High Court has ordered to withhold the release of results for the TET exam held on July 4th and 5th, 2026, until July 24th, 2026.
Next Hearing Date: The court has scheduled the next hearing regarding this case for July 24th, 2026.
Teacher Qualifications Questioned: During the ruling, the judge raised concerns about why senior teachers with experience should not receive specific exemptions or privileges based on their service.
Legal Action by Teachers' Association: State and Chennai district representatives of the teachers' association filed a case in the Chennai High Court requesting that TET results be withheld until answer sheets are properly evaluated

No comments:
Post a Comment