தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிக்கை 08.07.2026
வளர்க கல்வி!
வெல்க ஆசிரியர் கூட்டணி!!
தொடக்கம் : 1946 பதிவு எண். 118/61
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
(தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்டது) கிளை: கள்ளக்குறிச்சி மாவட்டம்.
TAMILNADU ELEMENTARY SCHOOL TEACHER'S FEDERATION
(Recognised by the Government of Tamilnadu)
Branch: Kallakurichi District.
பதிவு எண். 118/61
முகவரி : நெ.5, வடிவேல் நகர், திருக்கோவிலூர்
605757.
Á: 9976979471
V.புஷ்பராஜ் M.A., B.Ed.,
மாவட்டச் செயலாளர்
. 08.07.2026.
பெறுநர்:-
மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
கள்ளக்குறிச்சி மாவட்டம்.
பொருள்:-
பெண் 2027 மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணியில் ஆசிரியர்களை ஈடுபடுத்தும் போது மனிதாபிமான அடிப்படையில் வயது, உடல்நலக் காரணங்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு உரிய விலக்கு மற்றும் முன்னுரிமை வழங்கக் கோருதல் - தொடர்பாக
மதிப்பிற்குரிய ஐயா,
2027 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு என்பது நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்கும், நிர்வாகத் திட்டமிடலுக்கும் அடித்தளமாக அமையும் மிக முக்கியமான தேசியப் பணியாகும். இப்பணியில் ஆசிரியர்கள் பல ஆண்டுகளாக அர்ப்பணிப்பு உணர்வுடனும், சிறப்பான ஒத்துழைப்புடனும் செயல்பட்டு அரசின் நம்பிக்கையைப் பெற்றுள்ளனர். எனினும், தற்போதைய சூழலில் ஆசிரியர்களின் வயது, உடல்நல நிலை, பாதுகாப்பு மற்றும் குடும்பப் பொறுப்புகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, பணியை திறம்படவும் மனிதாபிமான அடிப்படையிலும் மேற்கொள்ளும் வகையில் கீழ்க்கண்ட கோரிக்கைகளை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கள்ளக்குறிச்சி மாவட்டக் கிளை சார்பில் பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.
கோரிக்கைகள்
1) 55 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட ஆசிரியர்களுக்கு மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணியிலிருந்து விலக்கு வழங்க வேண்டும்
2) புற்றுநோய், இதய அறுவைச் சிகிச்சை, சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை அல்லது டயாலிசிஸ் சிகிச்சை, விபத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் மற்றும் பிற தீவிர உடல்நலக் குறைபாடுகளுக்காக தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் உள்ள ஆசிரியர்களுக்கு தகுந்த மருத்துவச் சான்றிதழின் அடிப்படையில் இப்பணியிலிருந்து முழுமையான விலக்கு வழங்க வேண்டும்.
3) கிறித்துவ கன்னியாஸ்திரி ஆசிரியர்களுக்கு, அவர்களின் தனித்துவமான பணிச் சூழல் மற்றும் நிர்வாகத் தேவைகளைக் கருத்தில் கொண்டு உரிய விலக்கு வழங்க வழங்க வேண்டும்.
4) பெண் ஆசிரியர்களுக்கு, அவர்களின் பாதுகாப்பு, குடும்பப் பொறுப்புகள் மற்றும் பயணச் சிரமங்களைக் கருத்தில் கொண்டு, அவர்கள் தற்போது பணிபுரியும் பள்ளிக்கு அருகிலுள்ள பகுதிகளிலேயே மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணி ஒதுக்கப்பட வேண்டும் ஆசிரியர்களின் நலன் மற்றும் மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணியின் தரம் ஆகிய இரண்டையும் பாதுகாக்கும் வகையில், மேற்கண்ட கோரிக்கைகள் அனைத்தும் மனிதாபிமான அணுகுமுறையுடன் பரிசீலிக்கப்பட்டு உரிய நிர்வாக உத்தரவுகள் பிறப்பிக்கப்பட வேண்டும். 5) தற்போது ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெற்று வருவதால், பணியிட மாறுதல் பெற்று புதிய பள்ளிகளில் பணியில் சேரும் ஆசிரியர்களுக்கு, அவர்கள் தற்போது பணிபுரியும் புதிய பள்ளி அமைந்துள்ள பகுதிகளிலேயே மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணி ஒதுக்கீடு செய்ய வேண்டும் ஏற்கனவே பணியாற்றிய பகுதிகளில் பணி வழங்கப்படுவதைத் தவிர்த்து, தற்போதைய பணியிடத்தின் அடிப்படையில் பணி ஒதுக்கீடு செய்ய உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்
எனவே, மேற்கண்ட கோரிக்கைகளை தாங்கள் கருணையுடன் பரிசீலித்து, ஆசிரியர்களின் நலனையும் அரசுப் บ செயல்திறனையும் கருத்தில் கொண்டு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கள்ளக்குறிச்சி மாவட்டக் கிளை சார்பில் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி.
தங்கள் உண்மையுள்ள,
81712026
(V.புஷ்பராஜ்)



No comments:
Post a Comment