தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் (TNPGTA) அறிக்கை 08.07.2026
📢 *தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம், (TNPGTA)* *தூத்துக்குடி மாவட்டம் சார்பாக,*
உயர்கல்வி சேர்க்கை இலக்குகள் மற்றும் அதனைச் சார்ந்த நிர்வாகப் பணிகளால் ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் பணிச்சுமை, மனஅழுத்தம் மற்றும் கற்பித்தல் பணியில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விரிவான மனு இன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு (CM Cell) அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும், இம்மனுவின் நகல்கள் மரியாதையுடன்
🔹 A. Rajmohan, மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அவர்களுக்கும்,
🔹 Vishu Mahajan, மதிப்பிற்குரிய தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இம்மனுவில், உயர்கல்வி சேர்க்கை மற்றும் மாணவர் சேர்க்கை தொடர்பான பணிகளுக்காக பள்ளி ஆசிரியர்கள் மீது அளவுக்கு மீறிய நிர்வாக அழுத்தம் ஏற்படுத்தப்படுவது கற்பித்தல் பணியின் தரத்தையும், ஆசிரியர்களின் மனநிலையையும் பாதிக்கக் கூடும் என்பதால், இதற்கென தனித்துறை மற்றும் தனி அலுவலர்கள் நியமித்து அந்தப் பணிகளை ஒருங்கிணைத்து செயல்படுத்திட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், ஆசிரியர்களின் முதன்மை பணி கற்பித்தல் என்பதனை கருத்தில் கொண்டு, அவர்களின் கல்விப் பணியை பாதிக்காத வகையில் நிர்வாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல், ஆசிரியர்களின் மனநலம் மற்றும் பணிச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டும்; அதிகப்படியான இலக்கு நிர்ணயம் மற்றும் நிர்வாக அழுத்தங்கள் தவிர்க்கப்பட வேண்டும்; மாணவர்களின் கல்வி நலனும், ஆசிரியர்களின் மனநல நலனும் சம அளவில் பாதுகாக்கப்படும் வகையில் அரசின் கனிவான மற்றும் சாதகமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதையும் மனு வலியுறுத்துகிறது.
ஆசிரியர்களின் கற்பித்தல் திறன், மாணவர்களின் கல்வி முன்னேற்றம் மற்றும் அரசுப் பள்ளிகளின் கல்வித் தரம் ஆகியவற்றை பாதுகாக்கும் நோக்கில் அரசின் உரிய கவனமும், விரைவான நடவடிக்கைகளும் கிடைக்கும் என நம்புகிறோம்.
*தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் (TNPGTA)* *தூத்துக்குடி மாவட்டம்*
CLICK HERE TO DOWNLOAD தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் (TNPGTA) அறிக்கை 08.07.2026 PDF
No comments:
Post a Comment