Breaking

Sunday, June 28, 2026

அரசு பள்ளிகளில் தேர்தல் - ஜூலை 7ல் நடத்த உத்தரவு

This news snippet outlines instructions for organizing student parliament elections in government schools in Tamil Nadu.

Election Date: The school elections are scheduled to be held on July 7th.

Purpose: The initiative, part of the "Magizh Mutram" scheme, aims to develop leadership, teamwork, and democratic values among students.

Process: Candidates must campaign the day before the election, and ministers should be chosen to head specific departments like communication, environment, and health.

அரசு பள்ளிகளில் தேர்தல் ஜூலை 7ல் நடத்த உத்தரவு

சேலம், ஜூன் 26

தமிழக அரசு, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் மாணவர்கள் இடையே தலைமை பண்பு, குழு பணி, ஆளுமைத்தி றனை மேம்படுத்த, மகிழ் முற்றம் திட்டம் செயல்படுத்தப்படு கிறது.

இதை நடப்பு கல்வி ஆண்டில், மாணவர் பார்லிமென்டுடன் ஒருங்கிணைத்து செயல் படுத்த, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளி கல் வித்துறை இயக்குனர் கண் ணப்பன், நேற்று முன்தினம் வெளியிட்ட சுற்றறிக்கை:


மாணவர் பார்லிமென்ட் திட் டத்தின் ஒரு பகுதியாக, மாண வர்கள் இடையே ஜனநாயக மாண்புகளை வளர்க்க, ஜூலை, 7ல் தேர்தல் நடத்த வேண்டும். அதற்கு முந்தைய நாள், போட் டியிடும் மாணவர்கள், தேர்தல் வாக்குறுதிகளை முன் வைத்து பிரசாரத்தில் ஈடுபட வேண்டும்.

கல்வி, மாணவர் நலன், VOTE தகவல் தொடர்பு, சுற்றுச் சூழல், சுகாதாரம் ஆகிய முக்கிய அமைச்சகங்க ளுக்கு தனித்தனியே அமைச்சர்கள் தேர்ந்தெ டுக்கப்பட வேண்டும்.

அவர்களுக்கு ஜூலை, 10ல், சிறப்பு விருந் தினர்கள் முன் பதவி யேற்பு விழா நடத்த வேண்டும்.

ஒவ்வொரு மாதமும் புது வகுப்பு தலைவர்களை நிய மிப்பதன் மூலம் அதிகப்ப டியான மாணவர்களுக்கு தலைமை ஏற்கும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். மாணவர்களின் வருகைப்ப திவு, கல்வித்திறன், கலைத் திருவிழா யவற்றின் பங்களிப்பு ஆகி அடிப்படையில் மதிப்பெண்கள் வாராந்திர வழங்கப்பட்டு, மாதந் தோறும் சிறந்த குழு தேர்ந் தெடுக்கப்பட வேண்டும்.

இத்திட்டத்தை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் முறையாக கண்காணித்து செயல்படுத்த வேண்டும்.

No comments:

Post a Comment