Based on the provided text, here are the details regarding the NEET training camp initiative:
Objective: The School Education Department is organizing a short-term training camp to prepare government and government-aided school students for the upcoming NEET re-examination.
Re-exam Date: The NEET re-examination is scheduled to be held on June 21, 2026.
Camp Details:
The district-level camp will run until June 20, 2026.
Approximately 5,000 students from 38 districts are expected to participate.
The camp includes subject-specific training, mock tests, and guidance from educational experts.
Requirements: Students must attend in their school uniform and bring their identity card.
பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு:
'நீட்' தேர்வுக்கான குறுகிய கால பயிற்சி முகாம்
அடுத்த மாதம் 20-ந்தேதி வரை நடக்கிறது
'நீட்' தேர்வு ரத்து செய்யப்பட்டு மறுதேர்வு அடுத்த மாதம் (ஜூன்) 21-ந்தேதி நடைபெற இருக்கிறது. ஏற்கனவே 'நீட்' தேர்வுக்காக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை பயிற்சி அளித்து வரு கிறது. இந்த நிலையில் மறுதேர்வுக்கான குறுகிய கால பயிற் சியை பள்ளிக்கல்வித் துறை ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, நீட் தேர்வில் பங்கேற்க இருக்கும் அரசு, அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களை தயார்ப டுத்தும் நோக்கில் மாவட்ட அளவிலான குறுகியகால பயிற்சி முகாம் அடுத்த மாதம் (ஜூன்) 20-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. 38 மாவட்டங்களில் இருந்து 5 ஆயிரம் மாணவ-மாணவிகள் பங்கேற்க இருக்கிறார்கள்.
இந்த முகாமில் மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயாராகும் வகையில் பாடவாரியாக பயிற்சிகள், மாதிரித்தேர்வுகள் மற் றும் கல்வியியல் நிபுணர்களின் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட இருக்கின்றன.
இதில் மாணவ-மாணவிகள் பங்கேற்பதை தலைமை ஆசி ரியர்கள் வாயிலாக உறுதிசெய்ய வேண்டும். மாணவர்கள் வருகையை பதிவேட்டில் உறுதிசெய்ய வேண்டும். மாணவர் கள் கட்டாயம் பள்ளிச் சீருடையிலும், அடையாள அட்டை அணிந்தும் பங்கேற்கவேண்டும் என பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
நீட் மறு தேர்வுக்கு ஜூன் 20 வரை பயிற்சி
தமிழகத்தில் நீட் தேர்வுக்காக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நீட் மறு தேர்வு ஜூன் 21-ம் தேதி நடைபெறவுள்ளது.
இதையடுத்து மறு தேர்வுக்கான குறுகிய கால பயிற்சியை பள்ளிக்கல்வித் துறை ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி நீட் தேர்வில் பங்கேற்கவுள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களை தயார்ப்படுத்தும் நோக்கில் மாவட்ட அளவிலான பயிற்சி முகாம் ஜூன் 20-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
இந்த முகாமில் மாணவர்கள் நீட் தேர்வுக்குத் தயாராகும் வகையில் பாடவாரியாகப் பயிற்சிகள், மாதிரித் தேர்வுகள் மற்றும் கல்வியியல் நிபுணர்களின் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட உள்ளன.
இதில் மாணவ-மாணவிகள் பங்கேற்பதை தலைமை ஆசிரியர்கள் வாயிலாக உறுதி செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை சார்பில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


No comments:
Post a Comment