Breaking

Monday, April 13, 2026

பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் அனைவருக்கும் சமர்ப்பணம்.



பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் அனைவருக்கும் சமர்ப்பணம்.

சிவப்பு மை – நீல மையோடு

காதல் கொள்ளும் நேரம்.

ஒரு வருட உழைப்பினை

அறுவடையாக்கும்

அற்புதமான நேரம்.

சிவப்பு அபாயத்தின்

குறியீடா யார் சொன்னது ..

இதோ எத்தனை எத்தனை

சிவப்பு மை பேனாக்கள்….

அன்பின் குறியீடாக...

தத்தளித்தவர்களுக்குத்

தன்னம்பிக்கை கொடுத்து....

தன்னை இழந்து

அவர்களைக் காத்து....

வாழ்வின் அடுத்த உயரத்திற்கு

அழைத்துச் செல்லும்

அற்புதமான நிறமல்லவா? சிவப்பு….

சுழிக்க மனமில்லாமல்

சுழிப்பதும்

குறைக்க மனமில்லாமல்

குறைப்பதும்

டேலி ஆகாமல்

தவிப்பதும்

பி பார்ட் கிழிப்பதும்

அன்றாடம் நிகழும்

அற்புத காட்சிகள். சிவப்பு மையால் மதிப்பெண் இட்டு

ஊதா மையால் கூர்ந்தாய்ந்து

பச்சை மையால் பாராட்டி

நீல மையை நிஜமாக்கும்

இந்த விடைத்தாள் திருத்தும் முகாம் தான்

எத்தனை எத்தனை அனுபவங்களைத் தருகிறது.

ஒவ்வொரு விடைத்தாளிலும்

ஆசிரியரின் உழைப்பு

அப்பட்டமாகத் தெரிகிறது.

மாணவரின் உழைப்பு

மலைபோல் தெரிகிறது.

அத்தனை உழைப்புகளும்

வீணாகமல் பார்ப்பது

திருத்துபவரின் பொறுப்பு.

ஒவ்வொரு விடைத்தாளிலும்

அவரவர் மாணவர்களின் முகம் தெரிந்தால்

அதுவே முகாமின் சிறப்பு…………………………….

பொறுப்புடனும் கவனமுடனும்

அவர்களின் கல்விப்யணத்தில்

நாமும் கை கோர்ப்போம்.

அவர்களால் நாம்….

அவர்களுக்காகவே நாம்…

வாழ்த்துகளுடன்….

சகிபாலா……………….

No comments:

Post a Comment