Breaking

Friday, March 20, 2026

ஆசிரியையின் மூன்றாவது பிரசவத்துக்கு மகப்பேறு விடுப்பு மறுத்த உத்தரவு ரத்து

ஆசிரியையின் மூன்றாவது பிரசவத்துக்கு மகப்பேறு விடுப்பு மறுத்த உத்தரவு ரத்து

சென்னை, மார்ச் 20-

நீலகிரியை சேர்ந்த ஆசி ரியையின், மூன்றாவது பிர சவத்துக்கு, ஊதியத்துடன் கூடிய ஓராண்டு மகப்பேறு விடுப்பு வழங்க மறுத்து, கூடலுார் வட்டார கல்வி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது.

நீலகிரி மாவட்டம், கூடலுாரை சேர்ந்த சுமயா ரஹமத் என்பவர் தாக்கல் செய்த மனு:

கூடலுார் நாயக்கன் சோலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், கடந்த ஆண்டு ஜூலை 25ல் இடைநிலை ஆசிரி யராகப் பணியில் சேர்ந் தேன். ஆசிரியராக சேரு வதற்கு முன், இரண்டு குழந்தைகள் உள்ளனர். தற்போது 3வது கர்ப்பமாகி உள்ளேன். ஏப்., 15ம் தேதி குழந்தை பிறப்பு இருக் கலாம் என, டாக்டர்கள் கூறியுள்ளனர்.

ஆகையால், ஏப்.,15 முதல் 2027ம் ஆண்டு ஏப்., 14ம் தேதி வரை, ஓராண்டு சம்பளத்துடன் கூடிய மகப்பேறு விடு முறை வழங்க கோரி, கடந்தடிச.9ல்கூடலூர் வட்டார கல்வி அதி காரிக்கு விண்ணப் பித்தேன்.

ஆனால், 3வது பிரசவத்துக்கு மகப்பேறு விடு முறை வழங்க விதிகள் இல்லை எனக் கூறி, கடந்த ஜன.,9ல் விண்ணப்பத்தை நிராகரித்து உத்தரவிட் டார். இதை ரத்து செய்து, ஓராண்டு மகப்பேறு விடுப் புடன் கூடிய ஊதியம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப் பட்டு உள்ளது. இந்த மனு, நீதிபதி பி.டி. ஆஷா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதா ரர் தரப்பில், வழக்கறிஞர் பி.முரளி ஆஜராகி, "மூன் றாவது பிரசவத்துக்கு மகப் பேறு விடுப்பு வழங்கலாம் என, ஏற்கனவே உச்ச நீதி மன்றம், உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருப் பினும், மகப்பேறு விடுப்பு வழங்க மறுப்பது அர சியலமைப்புக்கு எதிரானது, "என் றார்.



அரசு தரப்பில் சிறப்பு மைத்ரேயி பிளீடர் சந்த்ரு ஆஜராகி, “மூன்றாவது பிரசவத்துக்கு மகப்பேறு விடுப்பு வழங்கும் வகை யில் விதிகள் இல்லை என்பதால், மனுவை தள் ளுபடி செய்ய வேண்டும்," என்றார். இதையடுத்து, மனுதாரர் தரப்பு வாதத்தை ஏற்ற நீதிபதி, மனுதாரரின் விண்ணப்பத்தை நிராக ரித்து, கூடலுார் வட்டார கல்வி அதிகாரி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத் தரவிட்டார்.

The provided image is a news report regarding a Madras High Court ruling on maternity leave for a teacher.

The Madras High Court has quashed an order by the Gudalur Regional Education Officer that denied paid maternity leave to a teacher for her third child.

The court ruled that denying maternity leave for a third child is unconstitutional, citing previous rulings from the Supreme Court and High Court.

The petitioner, a teacher from the Nilgiris district, was denied a one-year paid maternity leave despite already having two children.

No comments:

Post a Comment