Breaking

Friday, March 20, 2026

1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முழுஆண்டு தேர்வு அட்டவணை வெளியீடு

1 - 9th Std Annual Exam Timetable Published - DSE & DEE Proceedings

பள்ளி முழுஆண்டு தேர்வு அறிவிப்பு

1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முழுஆண்டு தேர்வு அட்டவணை வெளியீடு

1 முதல் 3-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 8-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 16 வரை தேர்வு

4 மற்றும் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 6 முதல் ஏப்ரல் 16 வரை தேர்வு

6 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு ஏப்ரல் 1-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 16-ம் தேதி வரை தேர்வு

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு முன்கூட்டியே தேர்வுகளை நடத்த ஏற்பாடு

முன்னதாக ஏப்ரல் 10 முதல் ஏப்ரல் 24-ம் தேதி வரை தேர்வுகளை நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.

தமிழகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 2025-26 கல்வியாண்டிற்கான முழு ஆண்டுத் தேர்வு அட்டவணையைப் பள்ளிக் கல்வித்துறை இன்று வெளியிட்டுள்ளது.

CLICK HERE TO DOWNLOAD 1 - 9th Std Annual Exam Timetable - DSE & DEE Proceedings PDF ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேர்வுகள் வழக்கத்தை விட முன்கூட்டியே நடத்தப்படுகின்றன

முக்கிய விவரங்கள்: தேர்வு நேரம்: தேர்வுகள் பொதுவாக காலை 10:00 மணி முதல் மதியம் 12:30 மணி வரை நடைபெறும். கோடை விடுமுறை: தேர்வுகள் அனைத்தும் ஏப்ரல் 16-ம் தேதியுடன் முடிவடைகின்றன. மாணவர்களுக்கு ஏப்ரல் 17-ம் தேதி முதல் மே 31-ம் தேதி வரை 45 நாட்கள் கோடை விடுமுறை அளிக்கப்படும். பள்ளி மீண்டும் திறப்பு: புதிய கல்வியாண்டிற்கான (2026-27) பள்ளிகள் ஜூன் 1, 2026 அன்று மீண்டும் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment