பணி சான்றிதழ் (Service Certificate) பெறுவதற்காக ஆசிரியர்களிடம் 30 முதல் 50 பக்கங்கள் கொண்ட ஆவணங்களின் நகல்களை அதிகாரிகள் கோருவது தற்பொழுது ஆசிரியர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
குழப்பமான கோரிக்கைகள்: ஆசிரியர்களின் பணிப்பதிவேடு (Service Register) மற்றும் 'எமிஸ்' (EMIS) இணையதளத்திலேயே அனைத்து அசல் சான்றிதழ்களும் விவரங்களும் ஏற்கனவே உள்ளன. இருப்பினும், அவற்றை மீண்டும் நகலெடுத்து சமர்ப்பிக்க அதிகாரிகள் வற்புறுத்துவதாக ஆசிரியர்கள் தரப்பில் புகார் எழுந்துள்ளது.
பணிச்சுமை: ஒரு சான்றிதழைப் பெற ஒவ்வொரு ஆசிரியரும் 30-50 பக்கங்களை நகலெடுத்துத் தர வேண்டியுள்ளது. இது ஆசிரியர்களுக்கு மட்டுமல்லாது, அவற்றைச் சரிபார்க்கும் அதிகாரிகளுக்கும் தேவையற்ற பணிச்சுமையை உருவாக்குகிறது என ஆசிரியர்கள் அமைப்பினர் (TETO-JAC) தெரிவிக்கின்றனர்.
விண்ணப்ப நடைமுறை: 2026-ம் ஆண்டு நடைபெறும் ஆசிரியர் தகுதித் தேர்விற்கு (TNTET) விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் இந்தப் பணிச் சான்றிதழைப் பதிவேற்ற வேண்டியுள்ளது.
தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் வட்டார கல்வி அலுவலரிடமும் (BEO), உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் முதன்மை கல்வி அலுவலரிடமும் (CEO) கையொப்பம் பெற்று சான்றிதழைப் பதிவேற்ற வேண்டும்.
அதிகாரிகளின் நிபந்தனை: பணிச் சான்றிதழ் கடிதத்துடன் பணிப்பதிவேடு மற்றும் எமிஸ் ஆவணங்களின் நகல்களையும் இணைத்து அனுப்ப வேண்டும் என்று அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளது தான் இந்தப் போராட்டத்திற்குக் காரணமாகும்.
தற்போதைய நடைமுறைப்படி, விண்ணப்பதாரர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் (TRB) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள குறிப்பிட்ட படிவத்தைப் (Annexure-I) பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
TET - பணி சான்றிதழ் வழங்க இத்தனை ஆவணங்களா! குழப்பும் அதிகாரிகள்; அதிருப்தியில் ஆசிரியர்கள்
பணி சான்றிதழ் வழங்க, ஏற்கனவே பணிப்பதிவேட்டில் பராமரிக்கப்படும் ஆவணங்களின் நகல்களை, மீண்டும் இணைத்து அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளதாக, ஆசிரியர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். கட்டாயக்கல்வி உரிமைச்சட்டப்படி, எட்டாம் வகுப்பு வரை கையாளும் அனைவரும், ஆசிரியர் தகுதித்தேர்வு (டெட்) தேர்ச்சி பெற வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பணியை தொடரவும், பதவி உயர்வுக்கும் இத்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதனால், அரசு, உதவிபெறும், தனியார் பள்ளிகளில் பணி புரிவோருக்கு சிறப்பு டெட் தேர்வு அறிவிப்பை, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) சமீபத்தில் வெளியிட்டது. இதற்கு ஆன்லைனில் (www.trb.tn.gov.in) விண்ணப்பிக்க, ஏப்., 10 கடைசிநாளாகும். இதற்கான விண்ணப்பித்தில், பணிசான்றிதழ் சமர்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இப்படிவம், டி.ஆர்.பி., இணையதளத்தில் உள்ளது. இதை பூர்த்தி செய்து, தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் வட்டார கல்வி அலுவலர் மற்றும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், முதன்மை கல்வி அலுவலர் கையொப்பத்துடன், சான்றிதழைபதிவேற்ற வேண்டும். இச்சான்றிதழில் ஆசிரியர் பணியில் சேர்ந்த நாள், கல்வித்தகுதி, தற்போது பணி புரியும் பதவி, பள்ளி சார்ந்த விபரங்கள் இடம்பெற்றுள்ளன.
இத்தகவல் ஏற்கனவே, ஆசிரியர்களின் பணிப்பதிவேட்டில் உள்ளது. இப்பதிவேடு, வட்டார கல்வி அலுவலகம் மற்றும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பள்ளி தலைமையாசிரியர் வசம் பராமரிக்கப்படுகிறது. மேலும், ஆசிரியர்களுக்கான 'எமிஸ்' இணையதளத்திலும் உள்ளது. இதே ஆவணங்களை நகலெடுத்து, பணிசான்றிதழ் கடிதத்துடன் இணைத்து அனுப்புமாறு கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு கோவை நிர்வாகி சந்திரசேகர் கூறுகையில்,''பணிப்பதிவேடு மற்றும் 'எமிஸ்' போர்டலில், ஆசிரியர்களின் அனைத்து விபரங்களுக்கான அசல் சான்றிதழ்கள் உள்ளன.
இதை பார்வையிட்டு, பணிசான்றிதழ் வழங்கலாம். ஒவ்வொரு ஆசிரியரும், 30-50 பக்கம் நகல் எடுத்து சமர்பிக்க வேண்டியுள்ளது. ஒரு சான்றிதழ் வழங்க, பல ஆவணங்களின் நகல்களைகேட்பது, ஆசிரியர்களுக்கு மட்டுமல்ல, சரிபார்ப்பு பணியில் ஈடுபடுவோருக்கும் பணிச்சுமையை ஏற்படுத்தும்,'' என்றார்

No comments:
Post a Comment