Breaking

Sunday, February 15, 2026

தேர்ச்சிக்கான மதிப்பெண் 60 என அறிவியுங்கள் - ‘டெட்’டால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் மனு



தேர்ச்சிக்கான மதிப்பெண் 60 என அறிவியுங்கள் - ‘டெட்’டால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் மனு

தேசிய ஆசிரியர் சங்க மாநில பொதுச் செயலாளர் கந்தசாமி தலைமையில், திருச்சி. மதுரை மாவட்ட நிர்வாகிகள் மற்றும் டெட் பிரச்னையில் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் திருச்சியில் நேற்று, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யா மொழியை நேரில் சந்தித்து மனு அளித்தனர். மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:

ஆசிரியர் தகுதி தேர்வுக் கான தேர்ச்சி மதிப்பெண் குறைப்பு மூலம் பெருவாரி யான ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதற்காக, தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ் நாடு சார்பில் நன்றி. கடந் தாண்டு நவம்பர் மாதம் நடந்த ஆலோசனை கூட்டத்தில், ஒரு ஆசிரியர் கூட பாதிக்கப் படாமல் இந்த அரசு நடவ டிக்கை எடுக்கும் என தாங்கள் கூறியது அனைவருக்கும் மகிழ்ச்சியை தந்தது.

அதனை செயல்படுத்தும் விதத்தில், தேர்ச்சி பட்டியல் வெளிவரும் போது பொதுப் பிரிவினர் மற்றும் மாற்றுத்திற திருச்சியில் நேற்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழியை நேரில் சந்தித்து, டெட் மதிப்பெண் விவகாரம் தொடர்பாக முறையிட்ட தேசிய ஆசிரியர் சங்க நிர்வாகிகள். னாளிகள் தவிர மற்ற அனை வருக்கும் 5 சதவீத மதிப்பெண் குறைத்து அறிவிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. மற்ற அனைவருக்கும் மனமகிழ்வை தந்த அறிவிப்பு பொதுப்பிரி வினர் மற்றும் மாற்றுத் திறனா ளிளுக்கும் மன உளைச்சலை யும், வருத்தத்தையுமே தந்தது. அனைவரது நலனையும் கருத் தில் கொண்டு பொதுப் பிரிவி னருக்கு 75 மதிப்பெண்களும் (50 சதவீதம்), மாற்றுத் திறனா ளிகளுக்கு 60 மதிப்பெண்களும் (40 சதவீதம்) தேர்ச்சிக்கான வரம்பாக நிர்ணயித்து, திருத் திய தேர்ச்சி பட்டியலை வெளி யிட வேண்டும்.

ஆசிரியர் தகுதி தேர்வு ஒரு தகுதி தேர்வு மட்டுமே. பணி நியமனத்துக்கான தேர்வு இல்லை என்பதால் இட ஒதுக்கீட்டு விதிகள் இதற்கு பொருந்த வேண்டியது இல்லை. அனைத்து பிரிவின ருக்கும் தேர்ச்சிக்கான மதிப் பெண் 60 என நிர்ணயம் செய்து அரசாணை வெளி யிட்டு பணியிலுள்ள ஆசிரி யர்கள் பயன் பெற நடவ டிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

மனுவைப்பெற்று கொண்ட அமைச்சர் மகேஷ், விரைவில் இதற்கான தீர்வு களை எடுப்பதாக உறுதியளித் திருப்பதோடு, இதுதொடர் பாக, நாளை (16ம்தேதி) சென்னையில் தேசிய ஆசிரியர் சங்க நிர்வாகிகளை தன்னை சந்திக்கவும் அறிவுறுத்தியுள் ளார் என ஊடகச் செயலாளர் ஸ்ரீராம் தெரிவித்தார்.

No comments:

Post a Comment