Breaking

Thursday, December 25, 2025

ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் சரிபாதி பணியிடங்கள் காலி - கல்வித்தரம் பாதிக்கும் அபாயம்



ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் சரிபாதி பணியிடங்கள் காலி கல்வித்தரம் பாதிக்கும் அபாயம் - Half of the positions in teacher training institutions are vacant.

தமிழகத்தில் ஆசிரியர் பயிற்சி மற்றும் கல்வி ஆராய்ச் சியில் முக்கிய பங்காற்றும் மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற் றும் பயிற்சி நிறுவனம் (எஸ். சி.இ.ஆர்.டி) மற்றும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் (டயட்) சரி பாதி பணியிடங்கள் காலியாக இருப்பதால் கல்வித் தரம் பாதிக்கப்படும் நிலை ஏற் பட்டுள்ளது.

எஸ்.சி.இ.ஆர்.டி.,யில் மொத்த பணியிடங்களில் 48.21 சதவீதமும், டயட் மையங் களில் 34.12 சதவீதமும் காலி யாக உள்ளது. ஆசிரியர் பயிற்சி, தொழில்முறை மேம்பாடு, கல்வி ஆராய்ச்சி ஆகியவற்றில் இந்நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிப்பதை கருத்தில் கொண்டு, காலியிடங்களை உடனடி யாக நிரப்ப மாநில அரசுக்கு மத்திய கல்வி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. போதியதாக இல்லை

2017க்கு பிறகு எஸ்.சி. மற்றும் இடயர்களில் புதிய மையங்களில் புதிய நியமனங்கள் நடைபெறவில்லை; சிலஆண்டுகளுக்கு முன் பணியி டங்கள் குறைக்கப்பட்டது. ஒவ்வொரு டயட் மையத்தி லும் தலா 6 சீனியர் விரிவுரையா ளர்கள் மற்றும் 10 விரிவுரையா ளர்கள் பணியிடங்கள் உள்ளன. ஆனால், கோவை உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங் களில் தற்போது நான்கு விரிவு ரையாளர்கள் மட்டுமே பணி யாற்றி வருகின்றனர்.

இதனால், ஆசிரியர்களுக்கு நவீனக் கற்பித்தல் முறை களை பயிற்றுவிப்பது. சுல்வி ஆராய்ச்சி மேற்கொள்வது. பயிற்சி திட்டங்களை வடிவ மைப்பது, கல்வித் தர மேம் பாட்டு ஆராய்ச்சி மற்றும் கருத்தரங்குகளை நடத்துவது போன்ற பணிகள் பணிகள் அனைத்தி லும் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து டயட் விரிவுரையாளர்கள் கூறியதாவது

மத்திய அரசு பணியிடங் களை குறைத்தபோது பணி நிரவல் செய்யப்பட்டது. அதன் பின் நீதிமன்ற வழக்கு காரண மாக கலந்தாய்வு நிறுத்தப்பட் டது. 2016க்கு பிறகு, கடந்த ஆண்டு கலந்தாய்வு நடந்த

நிலையில், இந்த ஆண்டு நடக்குமா என்பது தெரிய வில்லை.

ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) புதிய நியமனங் களுக்காக இருமுறை அட்ட வணை வெளியிட்டும் தேர்வு கள் நடத்தப்படவில்லை.

நிதி இருந்தும் பலனில்லை டயட் மையங்களின் கட்ட மைப்பை மேம்படுத்த மத்திய அரசு இரண்டு ஆண்டுகளுக்கு முன் ரூ.15 கோடி நிதி ஒதுக் கியது. இதன் கீழ் மாநிலத் தில் டயட் மையங்களில் மேம்பாட்டு பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருவதாககூறப் படுகிறது.

எனினும், பணியிடங்கள் நிரப்பப்படாததால், புதிய கற் பித்தல் முறைகளை அறிமுகப் படுத்துதல், மாவட்ட அளவில் உள்ள பள்ளிகளுக்கு தேவை யான கல்வியியல் உதவிகளை வழங்குதல் உள்ளிட்ட முக்கி யப் பணிகளை முழுமையாக மேற்கொள்ள முடியாத நிலை தொடர்கிறது.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment