Breaking

Monday, December 8, 2025

போட்டிகளில் வென்றால் அறிவிப்பு பலகையில் மாணவர்களின் படம்



போட்டிகளில் வென்றால் அறிவிப்பு பலகையில் மாணவர்களின் படம்

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: தேசிய,மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர் களை கவுரவிக்கும் வகையில் அவர்களின் படங்களை அவரவர் படிக்கும் பள்ளியின் அறிவிப்பு பலகை களில் வைக்க வேண்டும். இதுகுறித்து அனைத்து பள்ளி களின் தலைமை ஆசிரியர் களுக்கும் மாவட்ட முதன் மைக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வெல்லும் மாணவர்களின் புகைப்படத்தை அறிவிப்பு பலகையில் வெளிப்படுத்த பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!The Director of School Education has ordered that photographs of students who participate in sports competitions and win prizes be displayed on the notice board!

விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வெல்லும் மாணவர்களின் புகைப்படத்தை அறிவிப்பு பலகையில் வெளிப்படுத்த பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!


பார்வையில் காணும் மதிப்பீட்டுக்குழு 2024 - 2025 பரிந்துரையில் மாநில மற்றும் தேசிய அளவில் விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பெற்று பரிசுகளை பள்ளிகளில் அவர்களைப் வெல்லும் மாணவர்களுக்கு அந்தந்த பெருமைப்படுத்தும் வகையில் அவர்கள் பெற்ற பரிசுடன் அவர்களின் புகைப்படம் அறிவிப்பு பலகைகளில் வெளிப்படுத்திட வேண்டுமென மதிப்பீட்டுக்குழு பரிந்துரைத்துள்ளது.

எனவே மாநில மற்றும் தேசிய அளவில் விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பெற்று பரிசுகளை வெல்லும் மாணவர்களுக்கு அந்தந்த பள்ளிகளில் அவர்களை பெருமைப்படுத்தும் வகையில் அவர்கள் பெற்ற பரிசுடன் அவர்களின் புகைப்படம் அறிவிப்பு பலகையில் வெளிப்படுத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் இதன் மூலம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

No comments:

Post a Comment