Bicycles should be provided to school students only after conducting quality testing - தரப் பரிசோதனை நடத்திய பின்னரே பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள்கள் வழங்க வேண்டும்
1 அண்ணாமலை வலியுறுத்தல்
சென்னை தர பரிசோதனை நடத்திய பின் னரே தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள்கள் வழங்க வேண்டும் என பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
இதுகுறித்து அவரது எக்ஸ் தள பதிவு: கோவை மாவட்டம் ஒண்டிப்புதூர் அரசு மேல் நிலைப்பள்ளியில், 11-ம் வகுப்பு மாணவர்கள் 117 பேருக்கு, வழங்கிய சைக்கிள்கள், சரி யாகப் பொருத்தப்படாமலும், சில உதிரிபாகங்கள் இல்லாம லும் வழங்கப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு, இலவச சைக் கிள் திட்டத்தின்கீழ் வழங்கப் பட்ட சைக்கிள்கள், இப்படி தர மற்ற உதிரிபாகங்களுடன் வழங் கப்பட்டுள்ளது வள்மையாகக் கண்டிக்கத்தக்கது. கடந்த ஆண்டுகளிலும், இது போன்ற தரம் குறைந்த சைக்கிள் கள் வழங்கப்பட்டதால், மாண வர்கள் அவற்றை நீண்டகாலம் பயன்படுத்த முடியாமல்,தங்கள் சொந்த செலவில் பழுது பார்த் தும்,பல மாணவர்கள்அவற்றை விற்பனை செய்ததாகவும் செய் திகள் வெளிவந்தன. குறிப்பாக கோவை மாவட்டத்தில் இதே பிரச்சினை தொடர்கிறது.
இந்த சைக்கிள் ஒப்பந்ததாரர்கள் யார். ஏன் தொடர்ந்து தரம் குறைந்த சைக்கிள்கள் கோவை பள்ளி மாணவர்களுக்குக் கொடுக்கப்படுகின்றன?
கோவையில் மட்டும் இந்த ஆண்டு 17,782 மாணவர்களுக்கு சைக்கிள்கள் வழங்கப்பட வேண்டும். ஒவ்வொன்றும் சுமார் ரூ.4,300 என்று திமுக அரசால் கூறப்படும் சைக்கிள்கள், இப் படி அடிப்படைக் குறைபாடு களைக் கூட சரிசெய்யாமல் வழங்குவதை ஏற்றுக்கொள் ளவே முடியாது. கோவை மட்டு மின்றி, தமிழகம் முழுவதுமே சைக்கிள்களை தர பரிசோதனை நடத்திய பின்னரே வழங்க வேண்டும். தரம்குறைந்த சைக் கிள்கள் வழங்கும் ஒப்பந்ததாரர் கள் மீது கடுமையான நட வடிக்கை எடுக்க வேண்டும். இவ் வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment