Breaking

Saturday, December 20, 2025

உயர் கல்வி உதவித் தொகைக்கு டிச. 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

உயர் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் - You can apply for the higher education scholarship.

மதுரை, டிச. 15: உயர் கல்வி உதவித் தொகைக்கு பிற் படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மர பின மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என மதுரை மாவட்ட ஆட்சியர் கே. ஜே. பிரவீன்குமார் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அரசு, உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், தனி யார் தொழில் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப் பட்ட, சீர்மரபின மாணவ, மாணவிகளுக்கு பிரத மரின் உயர் கல்வி உதவித் தொகைத் திட்டம் மூலம் ஆண்டுதோறும் கல்வி உதவித் தொகை வழங்கப்ப டுகிறது. அரசு, உதவி பெறும் கலை, அறிவியல் கல் லூரிகளில் இளநிலை பட்டப்படிப்பு பயிலுபவர்க ளுக்கு நிபந்தனையின்றி உதவித் தொகை வழங்கப் படும். தொழில் படிப்பில் இளநிலை, முதுநிலை, பாலிடெக்னிக் போன்ற பிற படிப்புகளை பயிலும் மாணவர்களுக்கு, அவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 2.50 லட்சத்துக்கு மிகாமலிருந்தால் மட்டுமே உதவித் தொகை வழங்கப்படும். தகுதியான மாணவர்கள், தங்கள் கல்வி நிறுவனத் தில் உள்ள உதவித் தொகைக்கான ஒருங்கிணைப்பு அலுவலரை நேரில் அணுகி யு.எம்.ஐ.எஸ். , https://umis.tn.gov.in/ இணையதளம் வாயிலாக டிச. 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத் தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலரை அலுவலக நேரங்களில் அணுகலாம் என்றார்அவர்.

No comments:

Post a Comment