Breaking

Monday, December 29, 2025

கொடுத்தால் கொண்டாடுவோம் இல்லாவிட்டால் துாக்கியெறிவோம் - முதல்வருக்கு ஆசிரியர்கள் எச்சரிக்கை

கொடுத்தால் கொண்டாடுவோம் இல்லாவிட்டால் துாக்கியெறிவோம் - முதல்வருக்கு ஆசிரியர்கள் எச்சரிக்கை - We will celebrate if he gives it, otherwise we will throw him out - Teachers warn the Chief Minister.



பெரம்பலுாரில் நடந்த தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட நிறுவன தலைவர் மாயவன் நிருபர்களிடம் கூறியது:

"முதல்வர் ஸ்டாலின் எங்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் நான்கரை ஆண்டாக காரணம் கூறி நிராகரித்து வருகிறார். பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல் படுத்துவோம் என எதிர்க்கட்சித் தலை வராக அவர் இருந்தபோது கூறியதை மறந்து விட்டு, இப்போது ஏமாற்று கிறார். நாளை (இன்று) ஜாக்டோ-ஜியோ சங்க நிர்வாகிகளை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு முதல்வர் அழைத் திருக்கிறார். பழைய பென்ஷன்

திட்டத்தை அமல்படுத்துவோம் என்ற அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கிறோம். அப்படி அவர் அறிவித்தால் தோள் மீது துாக்கி வைத்து கொண்டாடுவோம். அறிவிக்காவிட்டால் தோள் மீது இருக்கும் உங்களை கீழே தூக்கி போடும் நிலை ஏற்படும்.

பழைய பென்ஷன் திட்டத்துக்கு மாற்றாக எந்த திட்டம் கொடுத்தாலும் நாங்கள் ஏற்க மாட்டோம். இது உறுதி. அதுதான் எங்களுடைய நிலைப்பாடு. பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்கிற தேர்தல் வாக்குறுதியோடு, 10 அம்ச கோரிக் கையையும் நிறைவேற்றி வைக்க வேண்டும். நிறைவேற்றத் தவறினால் ஜன. 6ல் அரசு பணிகள் ஸ்தம்பிக்கும் என்றார். வகையில் போராட்டத்தை வேலை நிறுத்த நடத்துவோம்

No comments:

Post a Comment