Breaking

Saturday, June 13, 2026

தமிழக அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி பாடவேளை கட்டாயம்

தமிழக அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி பாடவேளை கட்டாயம்



தமிழக அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி பாடவேளை கட்டாயம் இடம்பெற வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: தமிழக பள்ளிக் கல்வித் துறைச் செயலர் தலைமையில் கடந்த மே 27-ம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை உடற்கல்வி பாடவேளை கட்டாயம் இடம்பெற வேண்டும். அந்த பாடவேளைகளில் மாணவர்களுக்கு உடற்பயிற்சி வகுப்புகள் நடத்த அறிவுறுத்த வேண்டும்.

அனைத்து உடற்கல்வி இயக்குநர்களும், ஆசிரியர்களும் உடற்கல்வி பாடவேளையில் அதற்கான பாடத் திட்டத்தை பயன்படுத்தி வகுப்புகள் எடுக்க வேண்டும். விளையாட்டில் விருப்பம் உள்ள மாணவர்களுக்கு, பள்ளி நேரம் முடிந்த பிறகு, சிறப்பு விளையாட்டுக்கான பயிற்சி வகுப்புகளை எடுக்க வேண்டும்.

எந்தெந்த அரசுப் பள்ளிகளில் மைதானங்கள் பயன்பாட்டில் இல்லை என்ற விவரங்களை உடனே முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும். தங்கள் மாவட்டங்களில் மாநில, தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட விளையாட்டுகளில் சாதனை படைத்த பள்ளிகள் விவரம், எந்த விளையாட்டுகள் என்ற விவரத்தை முதன்மை உடற்கல்வி ஆய்வாளர்களுக்கு உடனே தெரிவிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.


பள்ளிகளில் விரைவில் ‘உடற்கல்வி பிரிவு’ என்ற புதிய பாட திட்டம் A new 'Physical Education' curriculum to be introduced in schools soon.

மாணவர்​கள் விளை​யாட்​டுத் துறை​யில் சிறந்து விளங்க புதி​தாக ‘உடற்​கல்வி பிரிவு’ என்ற புதிய பாடத்​திட்​டத்தை உரு​வாக்​கத் திட்​ட​மிட்​டுள்​ள​தாக பள்​ளிக் கல்​வித்​துறை இயக்​குநர் எஸ்.கண்​ணப்​பன் தெரி​வித்தார்.

மதுரை கலைஞர் நூற்​றாண்டு நூல​கத்​தில் நேற்று பள்​ளிக்​கல்​வித் துறை சார்​பில் 10, பிளஸ் 2 வகுப்பு தேர்வு முடிவு​கள் பகுப்​பாய்வு மற்​றும் சிறப்பு வழி​காட்டு நெறி​முறை​கள் கூட்​டம், மாவட்ட முதன்​மைக்​கல்வி அலு​வலர் எஸ்​.த​யாளன் தலை​மை​யில் நடை​பெற்​றது. இக்​கூட்​டத்​தில் பள்​ளிக்​கல்​வித்​துறை இயக்​குநர் எஸ்​.கண்​ணப்​பன் பேசி​ய​தாவது:

தமிழகத்​தில் பள்​ளிக் கல்​வித்​துறை சார்​பில் 1, 2, 3-ம் வகுப்பு மாணவர்​களுக்கு சில மாற்​றங்​களு​டன் பாட நூல்​கள், பயிற்​சிப் புத்​தகம் இரண்​டை​யும் இணைத்து புதிய பாட நூல்கள் வழங்​கப்​படு​கின்​றன. குழந்​தைகள் மகிழ்ச்​சி​யாக கற்​றுக் கொள்​ளும் வாய்ப்பு ஏற்​படுத்​தப்​பட்​டுள்​ளது. அதனடிப்​படை​யில் அடுத்​தாண்​டில் 4 முதல் 8 வகுப்​புக்​கும், அடுத்து 9 முதல் பிளஸ் 2 வரை பாடத் திட்​டம் மாற்றி வடிவ​மைக்​கப்பட உள்​ளது. தலைமை ஆசிரியர்​களுக்​குத்​தான் தலை​மைப்​பண்பு இருக்​கிறது. பள்​ளி​களில் ஆசிரியர்​களின் பிரச்​சினை​கள், மாணவர்​களின் பிரச்​சினை​களை நெகிழ்​வுத் தன்​மையோடு சமநிலைப்​படுத்தி வழி நடத்​தி​னாலே பள்​ளி​கள் சாதனைப் பள்​ளி​களாக மாறும்.

ஆசிரியர்​கள் மாணவர்​களிடையே விளை​யாட்​டில் ஆர்​வத்தை ஏற்​படுத்த வேண்​டும். விளை​யாட்​டில் ஆர்​வ​முடைய மாணவர்​கள் படிப்​பில் தொய்வு இருக்​கும். அம்​மாணவர்​களை மட்​டம் தட்​டா​மல் ஊக்​கப்​படுத்த வேண்​டும். மாணவர்​கள் விளை​யாட்​டுத்​துறை​யில் சிறந்து விளங்க ‘உடற்​கல்வி பிரிவு’ (Physical Education Group) என்ற புதிய பாடத் திட்​டத்தை உரு​வாக்​கத் திட்​ட​மிட்​டுள்​ளோம். மாணவர்​களின் தனித்​திறன்​களை கண்​டறிந்து வெளிக்​கொணர வேண்​டும். ஆசிரியர்​கள் தூண்​டு​கோலாக இருந்​தாலே போதும். பெற்​றோர் எந்​தக் குழந்​தையை​யும் ஒப்​பிடக் கூடாது. இவ்​வாறு பேசி​னார்.

No comments:

Post a Comment