This article from the Dinamalar newspaper highlights initiatives for government schools in Madurai.
The Director of Elementary Education, Naresh, urged teachers to increase student enrollment in government and aided schools.
Textbooks and notebooks are stocked and ready for distribution on the first day of school reopening.
Approximately \(1.12\) lakh new students have enrolled in government and aided schools this academic year.
புதிய மாணவர்கள் சேர்க்கை அரசு பள்ளிகளை நோக்கி வரவேண்டும் தொடக்க கல்வி இயக்குநர் நரேஷ் பேட்டி New student admissions should be directed towards government schools: Director of Elementary Education Naresh (Interview)
"புதிய மாணவர்கள் சேர்க்கை அரசு, உதவி பெறும் பள்ளிகளை நோக்கி வரும் வகையில் இந்தாண்டு தலைமை யாசிரியர்கள், ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்"எனதொடக்கக் கல்வி இயக்குநர் நரேஷ் தெரிவித்தார்.
மதுரையில் இக்கல்வி யாண்டில் பள்ளி மாணவர் களுக்கு வழங்க வேண்டிய அரசின் விலையில்லா பாடப் புத்தகங்கள், குறிப் பேடுகள் இருப்பு வைக்கப் பட்டுள்ள புனித பிரிட்டோ பள்ளி மையத்தை அவர் பார்வையிட்டார். பள்ளி திறந்த முதல்நாளே மாண வர்களுக்கு வழங்க ஏற் பாடு செய்ய வேண்டும் என சி.இ.ஓ., தயாளன், டி.இ.ஓ.,க்கள் செந்தில் குமார், ரகுபதிக்கு உத்தர விட்டார்.
இதன் பின் நமது நிரு பரிடம் நரேஷ் கூறியதாவது: தமிழகத்தில் கோடை விடு பின் முறைக்கு பள்ளிகள் திறந்த முதல் நாளில் அனைத்து அரசு, உதவிபெறும் பள்ளிகளிலும் மாணவர்களுக்கு அரசு விலையில்லா புத்த கம், நோட்டுகள் வழங்க கல்வித்துறை தயார் நிலை யில் உள்ளது. பாடத் திட் டம் மாற்றம் காரணமாக ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு பாடப் புத்தகங் கள் அச்சடிக்கும் பணியில் உள்ளது. அம்மாணவருக் கும் விரைந்து வழங்க நட வடிக்கை எடுக்கப்படும். மாணவருக்கான ஷூக் கள் வட மாநிலங்களில் இருந்து பெறப்படுகின்றன. நலத்திட்டம் குறித்த தரம் சோதனை உள்ளிட்ட சில காரணங்களால் சில திட்டங்கள் வழங்கு வதில் தாமதம் ஏற்படலாம்.
இக்கல்வி யாண்டில் தற் போது வரை அரசு, உதவிபெறும் பள்ளிகளில் 1.12 லட்சம் மாணவர் புதிதாக சேர்க் கப்பட்டுள்ளனர். தேர்தல் மாணவர் எஸ்.ஐ.ஆர்., பணிகளால் சேர்க்கையில் பாதிப்பு ஏற் படவில்லை.
பள்ளி கடைசி வேலை நாளான ஏப்., 25ல் ஓய்வு பெற்ற தலைமையாசிரிய ரால் அப்பள்ளி ஆசிரியர் களின் சம்பள பில்லில் கையெழுத்திடாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் எந்த ஆசிரியருக்கும் சம் பள பிரச்னை ஏற்படாத வகையில் கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இவ்வாறு கூறினார். அவர்

No comments:
Post a Comment