Breaking

Tuesday, April 14, 2026

ஆசிரியர்களுக்கு தேர்தல் பணி - ஆப்சென்ட் குறித்து விளக்கம் கேட்டபோது அதிர்ச்சி



ஆசிரியர்களுக்கு தேர்தல் பணி - ஆப்சென்ட் குறித்து விளக்கம் கேட்டபோது அதிர்ச்சி Election Duty for Teachers: Shocking Revelation When Explanation Sought Regarding Absences

இறந்த, சிறையில் உள்ள ஆசிரியர்களுக்கும் தேர்தல் பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.

அரசு ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு தேர்தல் பணி ஒதுக்கப்பட்டு தொகுதிகள் வாரியாக ஏப்.,2ல் முதற்கட்ட தேர்தல் பயிற்சி வகுப்புகள் நடந்தன. மதுரையில் 1600க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்காதது குறித்து அவர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டது.

விசாரணையும் நடந்தது. அப்போது தேர்தல் கமிஷன் விலக்கு அளித்துள்ள மாற்றுத்திறனாளி (40 சதவீதம் மேல் பாதிப்பு), பார்வை குறைபாடு, பணியில் இருந்து ஓய்வு பெற 6 மாதங்கள் உள்ளோர், கர்ப்பிணி, இதய நோய் பாதிப்பு உள்ளோர், ஓய்வு பெற்ற, இறந்த, குற்ற வழக்கில் சிறையில் உள்ள ஆசிரியர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது தெரிந்தது. பங்கேற்காத காரணங்கள் குறித்த ஆவணங்களை விசாரணை குழுவிடம் ஆசிரியர்கள் சமர்ப்பித்தனர். ஆனாலும் அதில் 90 சதவீதம் பேருக்கு மீண்டும் 2ம் கட்ட பயிற்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பாண்டி, நிதி காப்பாளர் சீனிவாசன் கூறியதாவது:

தேர்தல் பணியில் ஆசிரியர்களை தான் அதிக எண்ணிக்கையில் ஈடுபடுத்துகின்றனர். பணியை மகிழ்ச்சியாக மேற்கொள்வதற்கு பதில் மனஉளைச்சலில் மேற்கொள்ளும் வகையில் உத்தரவுகள், அதிகாரிகள் கெடுபிடி உள்ளது.

மேலுார், மதுரை தெற்கு தொகுதிகளில் இறந்தவர், ஓய்வு பெற்றவர்களுக்கும், உசிலம்பட்டி தொகுதியில் மதுரை சிறையில் கைதியாக உள்ள ஆசிரியைக்கும் தேர்தல் பயிற்சி வகுப்பில் பங்கேற்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது அதிர்ச்சியாக உள்ளது.

அலட்சியமாக உத்தரவை பிறப்பித்தோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் கமிஷன் உத்தரவுபடி விண்ணப்பித்த ஆசிரியர்களுக்கு உடனடியாக விலக்களிக்க வேண்டும் என்றனர்.

No comments:

Post a Comment