This news article reports on the record number of applicants for the NEET undergraduate medical entrance examination for the current year.
Over 26 lakh students have applied for NEET, surpassing previous records.
The exam covers admissions for MBBS, BDS, AYUSH courses, veterinary sciences, and BSc Nursing in military colleges.
Scheduled for May 3rd, the exam will take place in 552 cities across India and 16 cities abroad.
The test consists of 180 questions for a total of 720 marks, conducted in 13 languages.
இளநிலை ‘நீட்' தேர்வு: 26 லட்சம் பேர் விண்ணப்பம்
சென்னை, ஏப். 6: இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு நிகழாண்டில் 26 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடி எஸ் படிப்புகள்,சித்தா,ஆயுர்வேதா,யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடைமருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங் கள் ஆகியவை நீட்தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. அதேபோல,ராணுவக் கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.
அதன்படி, நிகழ் கல்வியாண்டுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் வரும் மே 3-ஆம் தேதி பிற்பகல் 2 முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள் ளது. நாடு முழுவதும் 552 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், திருச்சி, மதுரை, கோவை உள் பட 30 நகரங்களிலும், துபை, அபுதாபி, தோஹா, மஸ்கட், ரியாத், சிங்கப் பூர் உள்ளிட்ட16 இடங்களிலும் தேர்வு நடைபெறுகிறது.
இந்தத் தேர்வுக்கான விண்ணப்ப நடைமுறைகள் பிப். 8-ஆம் தேதி https://neet.nta.nic.in என்ற இணையதளத்தில் தொடங்கி மார்ச் 11-ஆம் தேதி வரை நடைபெற்றது. இளநிலை மருத்துவப் படிப்புகளுக் கான நீட் தேர்வுக்கு இதுவரை இல்லாத வகையில், 26 லட்சத்துக்கும் மேற் பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். ஒவ்வோர் ஆண்டும் நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.
அதன்படி, 2017-இல் 11.38 லட்சமாகவும், 2018-இல் 13.26 லட்சமாக வும், 2019-இல் 15.19 லட்சமாகவும், 2020-இல் 15.97 லட்சமாகவும் அதிக ரித்துக்கொண்டே வந்தது. அதன்பின்னர், 2021-இல் 16.14 லட்சம்,2022-இல் 18.72 லட்சம், 2023-இல் 20.87 லட்சம், 2024-இல் 24.06 லட்சம்,2025-இல் 22.76 லட்சம் என உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
நிகழாண்டு விண்ணப்பித்தவர்களுக்கான தேர்வு மையம், ஹால் டிக்கெட் விரைவில் வெளியிடப்படஉள்ளது.
நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்பட 13 மொழிகளில் நடை பெற உள்ளது. மொத்தம் 180 கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு கேள் விக்கும் தலா 4 மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும். தவறான பதிலுக்கு 1 மதிப்பெண் குறைக்கப்படும்.
இதுவரை இல்லாத வகையில் ‘நீட்’ தேர்வுக்கு 26 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம் An unprecedented 2.6 million students have applied for the NEET examination.
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு நடப்பு ஆண்டில் 26 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் நீட் தேர்வில் தகுதி பெறுபவர்களைக் கொண்டு நிரப்பப்படுகின்றன. அதேபோல, ராணுவக் கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கும் நீட் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இத்தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்துகிறது.
அதன்படி, 2026-27-ம் கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் மே 3-ம் தேதி பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், திருச்சி, மதுரை, கோவை என 30 நகரங்கள் உட்பட நாடு முழுவதும் 552 நகரங்களில் தேர்வு நடக்கிறது. துபாய், அபுதாபி, தோகா, மஸ்கட், ரியாத், சிங்கப்பூர் என வெளிநாடுகளில் 16 இடங்களில் தேர்வு நடைபெறுகிறது. ஆன்லைனில் (https://neet.nta.nic.in) இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்பது கடந்த பிப்.8-ம் தேதி தொடங்கி மார்ச் 11-ம் தேதி முடிவடைந்தது. விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. சில நாட்களில் ஹால் டிக்கெட்டை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய தேசிய தேர்வுகள் முகமை திட்டமிட்டுள்ளது.
நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. அதன்படி, 2017-ல் 11.38 லட்சம் பேர், 2018-ல் 13.26 லட்சம், 2019-ல் 15.19 லட்சம், 2020-ல் 15.97 லட்சம், 2021-ல் 16.14 லட்சம், 2022-ல் 18.72 லட்சம், 2023-ல் 20.87 லட்சம், 2024-ல் 24.06 லட்சம், 2025-ல் 22.76 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். இதுவரை இல்லாத அளவுக்கு தற்போது 26 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.
தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் நீட் தேர்வு நடைபெறும். இத்தேர்வில் 180 கேள்விகள் கேட்கப்படும். ஒரு கேள்விக்கு 4 மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறுகிறது. தவறான பதிலுக்கு 1 மதிப்பெண் (நெகட்டிவ்) குறைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.



No comments:
Post a Comment