Breaking

Monday, April 6, 2026

பத்தாம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீடு: ஏப். 10-இல் தொடக்கம்

பத்தாம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீடு: ஏப். 10-இல் தொடக்கம் Class 10 Answer Sheet Evaluation: Begins on April 10

சென்னை, ஏப். 6: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீடு ஏப். 10-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளதாக தேர் வுத் துறை தெரிவித்துள்ளது.

தமிழக பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில் நிகழாண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் 2 முதல் 26-ஆம் தேதி வரை நடத் தப்பட்டது.

பத்தாம் வகுப்புக்கான பொதுத் தேர்வு மார்ச் 11-ஆம் தேதி தொடங்கி ஏப். 2-ஆம் தேதியு டன் நிறைவு பெற்றது. பற்றது.

மலையாளம், கன்னடம் உள் பட 9 விருப்ப மொழிப் பாடங்க ளுக்கான தேர்வு திங்கள்கிழமை (ஏப். 6) நடைபெற்றது. இந்தத் தேர்வை 4,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதினர்.


இந்தத் தேர்வு சற்று எளிதாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து விடைத்தாள் திருத்துதல் பணிகள் ஏப்ரல் 10 முதல் 17-ஆம் தேதி வரை நடை பெற உள்ளன. இதற்காக தமி ழகம் முழுவதும் 80-க்கும் மேற் பட்ட தேர்வு முகாம்கள் அமைக் கப்பட்டுள்ளன.

இந்த பணிகளில் சுமார் 50 ஆயி ரம் பட்டதாரி ஆசிரியர்கள் ஈடுப டுத்தப்பட உள்ளனர்.தொடர்ந்து மதிப்பெண் பதிவேற்றம் உள் ளிட்ட பணிகளை முடித்து திட்ட மிட்டபடி தேர்வு முடிவுகள் மே 20-ஆம் தேதி வெளியிடப்படும் என்று தேர்வுத் துறை அதிகாரி கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment