Breaking

Friday, March 6, 2026

13 வயதுக்குட்பட்டோர், 'சோஷியல் மீடியா' பயன்படுத்த தடை - ஆந்திர முதல்வர் நடவடிக்கை



ஆந்திர முதல்வர் நாரா சந்திரபாபு நாயுடு, 13 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் (Social Media) பயன்படுத்துவதைத் தடை செய்வதற்கான திட்டத்தை மார்ச் 6, 2026 அன்று ஆந்திர சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

90 நாட்களில் அமல்: இந்தத் தடையை அடுத்த 90 நாட்களுக்குள் நடைமுறைப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

நோக்கம்: சிறுவர்கள் அதிகப்படியான சமூக ஊடகப் பயன்பாட்டினால் ஏற்படும் எதிர்மறை விளைவுகள், மனநலப் பாதிப்புகள் மற்றும் சைபர் புல்லிங் (Cyberbullying) ஆகியவற்றிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும்.

13 - 16 வயதுடையோர்: 13 முதல் 16 வயது வரையிலான சிறுவர்களுக்கும் இக்கட்டுப்பாடுகளை நீட்டிப்பது குறித்து ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் இது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

பரிந்துரை: இந்தத் திட்டத்தை ஆந்திராவின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் கல்வித்துறை அமைச்சரான நாரா லோகேஷ் முன்மொழிந்துள்ளார்.

இதர மாநிலங்கள்:

ஆந்திராவின் இந்த அறிவிப்பு வருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாகவே, கர்நாடக அரசு 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை விதிப்பதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

இதனைச் செயல்படுத்த மொபைல் செயலிகள் மற்றும் சமூக ஊடக நிறுவனங்களுடன் இணைந்து தொழில்நுட்ப ரீதியிலான கட்டுப்பாடுகளைக் கொண்டுவர ஆந்திர அரசு திட்டமிட்டுள்ளது.

13 வயதுக்குட்பட்டோர், 'சோஷியல் மீடியா' பயன்படுத்த தடை - இளம் வயதினரை பாதுகாக்க ஆந்திர முதல்வர் நடவடிக்கை

நம் நாடு உட்பட உலகளவில், குழந்தைகளிடையே மொபைல் போன் பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்து வருகிறது. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மொபைல் போனில், 'கேம் விளையாடுகின்றனர்.

சமூக ஊடகங்களான, யூ டியூப், இன்ஸ்டா கிராம் ஆகியவற்றில், 'ரீல்ஸ்' எனப்படும் குறும் வீடியோக்களை பார்க்கின்றனர்.

வலியுறுத்தல்

இதில் ஒருசில குழந் தைகள், பெற்றோருக்கு தெரியாமலேயே அவர்க ளின் மொபைல் போனை எடுத்து, அன் லாக்" செய்து பயன்படுத்து கின்றனர். மொபைல் போனில் வீடியோ பார்த்தால் தாள் சாப்பிடுவேன் என்றும் சிலர் அடம் பிடிக்கின்றனர்,

அந்தளவுக்கு சிறு வயதிலேயே மொபைல் போனுக்கு அடிமையாகி விடுகின்றனர். இதை கரு தியே, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில், வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங் கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இதை, நம் நாட்டிலும் அமல்படுத்த வேண்டும் என, பல்வேறு தரப்பினர் மத்திய அரசை வலியு றுத்தி வருகின்றனர். அதற்கு அச்சாரம் போடும் . வகையில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம் - ஜன சேனா பா.ஜ., கூட் டணி ஆட்சி நடக்கும் ஆந்திராவில், 13 வயதுக் குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை விதிக்க உள்ளது. இது குறித்து, முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று கூறியதாவது:

ஆந்திராவில், 13 வய துக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்கள் பயன் படுத்த தடை விதிக்கப் படும். இது தொடர்பான கொள்கை, அடுத்த 90 நாட்களில் படிப்படியாக அமல்படுத்தப்படும். இந்த தடையை, 13-16 வயது வரையிலான சிறார் களுக்கும் நீட்டிக்கலாமா என்பது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது.

மோசமான விளைவு

உரிய ஆலோசனை மற்றும் கொள்கை ஆய் வுகளுக்கு பின், கூடுதல் நடவடிக்கைகள் எடுக் கப்படும். சிறார்களி டையே அதிகரித்து வரும் மொபைல் போன் பயன் பாட்டால் ஏற்படும் மோச மானவிளைவுகளை தடுக் கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

நாட்டிலேயே முதலி ரண்டு மாநிலங்களாக, ஆந்திரா மற்றும் கர் நாடகாவில், சிறார்கள் சமூக ஊடகங்கள் பயன் படுத்த தடை விதிக்கப்பட உள்ளது.

இதை பின்பற்றி தமி ழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் பயன்ப டுத்த தடை விதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தோனேஷியா நாட்டிலும் தடை

தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷி யாவிலும், 16 வயதுக் குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இது உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

இது குறித்து, அந்தாட்டின் தக வல் தொடர்பு துறை அமைச்சர் மியுட்டியா ஹபிட், "வரும் 25 முதல், 'யூ டியூப், டிக் டாக், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் உள்ளிட்ட சமூக ஊட கங்களில், சிறார்களின் கணக்குகள் படிப்படி யாக முடக்கப்படும். அரசு விதிகளுக்கு இணங்காத ஊ.. கங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் படும்," என்றர்.

கர்நாடகாவிலும் தடை

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலை மையில் காங்., ஆட்சி நடக்கிறது. இம்மாநில சட்டசபையில் நேற்று பேசிய முதல்வர் சித்த ராமையா, "மாநிலத்தில், 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமுக ஊடகங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்படும். இது விரைவில் அமலுக்கு வரும். குழந்தைகளிடையே அதிகரித்து வரும் மொபைல் போன் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க இந்த நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது,"என்றார்.

No comments:

Post a Comment