Breaking

Thursday, March 19, 2026

மார்ச்., 21 சனிக்கிழமை தமிழகத்தில் ரமலான் கொண்டாடப்படும்; தமிழக அரசின் தலைமை ஹாஜி முப்தி உஸ்மான் அறிவிப்பு



மார்ச்., 21 சனிக்கிழமை தமிழகத்தில் ரமலான் கொண்டாடப்படும்; தமிழக அரசின் தலைமை ஹாஜி முப்தி உஸ்மான் அறிவிப்பு

ஷரியத் அறிவிப்பு

ஹிஜ்ரி 1447 ரமலான் மாதம் 29ம் தேதி வியாழக்கிழமை ஆங்கில மாதம் 19-03-2026 தேதி அன்று மாலை ஷவ்வால் மாத பிறை சென்னையிலும் இதர மாவட்டங்களிலும் காணப்படவில்லை. ஆகையால் சனிக்கிழமை ஆங்கில மாதம் 21-03-2026 தேதி அன்று ஷவ்வால் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. ஆகையால் ஈதுல் பித்ர் சனிக்கிழமை 21-03-2026 தேதி கொண்டாடப்படும்.

ΜΟΟΝ ΑΝΝOUNCEMENT

The new moon for the month of Shawwal 1447 Hijri has not been sighted in Chennai and other districts on Thursday, 19-03-2026. Therefore, 1 Shawwal 1447 Hijri begins from Saturday, 21-03-2026. Eid-ul-fitr will be celebrated on 21-03-2026 (Saturday).



ஷவ்வால் மாத பிறை மற்றும் நோன்புப் பெருநாள் அறிவிப்பு - 2026 ஷவ்வால் மாதத்தின் முதல் பிறை இன்று தமிழகத்தில் தென்படவில்லை - சனிக்கிழமை (மார்ச் 21) ஈதுல் ஃபித்ர் நோன்பு பெருநாள் என தமிழ்நாடு அரசு தலைமை காஜி முஃப்தி உஸ்மான் முஹ்யித்தீன் பாகவி அறிவிப்பு.

தமிழ்நாடு அரசு தலைமை காஜி முஃப்தி உஸ்மான் முஹ்யித்தீன் பாகவி அவர்கள் இன்று வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது, இன்று வியாழக்கிழமை (19/03/2026) மாலை ஷவ்வால் மாதத்திற்கான பிறை தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் தென்படவில்லை. எனவே. ரமலான் மாதம் 30 நாட்களாக பூர்த்தியடைகிறது. அல்ஹம்து லில்லாஹ்...

இன்ஷா அல்லாஹ் 21/03/2026 சனிக்கிழமை அன்று தமிழகம் முழுவதும் ஈதுல் ஃபித்ர் (நோன்புப் பெருநாள்) கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்படுகிறது.

புனித ரமலான் மாதத்தில் நாம் மேற்கொண்ட நோன்புகளையும். நல் அமல்களையும் எல்லாம் வல்ல இறைவன் அங்கீகரிப்பானாக. இந்த இனிய நாளில் நம்மிடையே ஈகையும் சகோதரத்துவமும் தழைக்கட்டும். ஏழை எளியவர்களுக்கு உதவிகள் செய்து மகிழ்வுடன் இப்பெருநாளை கொண்டாடுவோம்.



அனைவருக்கும் எனது இதயம் கனிந்த ஈதுல் ஃபித்ர் ஈகைத் திருநாள் நல் வாழ்த்துக்கள்.

செய்தி வெளியீடு: தமிழ்நாடு அரசு தலைமை காஜி, முஃப்தி உஸ்மான் முகயித்தீன் பாகவி சென்னை

ஹிஜ்ரீ 1447 ஷவ்வால் பிறை அறிவிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹூ தமிழகத்தில் இன்று (19-03-2026 வியாழக்கிழமை) ஹிஜ்ரீ 1447 ஷவ்வால் பிறை தென்படாததால் ரமளான் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்து, 21-03-2026 சனிக்கிழமை அன்று சங்கையான ஷவ்வால் பிறை 1 ஆகும் என அறிவிப்பு செய்யப்படுகிறது.

ஸதகத்துல் ஃபித்ரு விபரம் :

ஹனஃபீ :

1 கிலோ 633 கிராம் கோதுமை, அல்லது அத கிரயம் ரூபாய் 90/-என (இவ்வாண்டு) நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

ஷாஃபிஈ :

2 கிலோ 400 கிராம் கோதுமை அல்லது அரிசி (கிரயம் தவிர்த்து) பொருளாக மட்டுமே கொடுக்க வேண்டும்.

இஸ்லாமிய சொந்தங்கள் அனைவருக்கும்

ஈகைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

No comments:

Post a Comment