Breaking

Sunday, March 1, 2026

பயன் படுத்தப்படாத விடைத்தாள் குறித்து அரசுத் தேர்வுத் துறை இயக்குனர் அவர்களின் செய்தி



பயன் படுத்தப்படாத விடைத்தாள் குறித்து அரசுத் தேர்வுத் துறை இயக்குனர் அவர்களின் செய்தி Message from the Director of Government Examinations regarding unused answer sheets

This official letter from the Director of Government Examinations in Chennai outlines instructions regarding unused answer sheets for the March/April 2026 public examinations.

Chief Superintendents must securely seal and lock away unused main answer sheets daily for absent students, witnessed by Departmental Officers and teachers.

These sealed unused answer sheet bundles must be handed over to the District Answer Sheet Storage Centers between April 8, 2026, and April 13, 2026.

This procedure applies to the Higher Secondary and Secondary public examinations.

All Chief Educational Officers and District Educational Officers are required to instruct examination center personnel to follow these guidelines.

அனுப்புநர்

பெறுநர்

இயக்குநர்

அரசுத் தேர்வுகள் இயக்ககம்.

சென்னை -600 006.

அனைத்து முதன்மை கல்வி அலுவலர்கள் மாவட்டக் கல்வி அலுவலர்கள்.

ந.க.எண்.005710/கே/2026

फ्राबा: 21.02.2026

ஐயா / அம்மையீர்.

பொருள்:

சென்னை-6. அரசுத் தேர்வுகள் இயக்ககம் மார்ச்/ஏப்ரல் 2026 மேல்நிலை/இடைநிலை பொதுத் தேர்வுகள்-பயன்படுத்தாத விடைத்தாட்கள் கட்டுகளாகக் கட்டி அரக்கு முத்திரையிட்டு பாதுகாத்து ஒப்படைக்க அறிவுறுத்தக் கோருதல்-சார்பு

பார்வை

இவ்வலுவலகக் கடிதம் /2026, नं: 09.02.2026 ந.க.எண்:000257/44-1 மார்ச்/ஏப்ரல் 2026 ல் நடைபெறவுள்ள மேல்நிலை முதலாம்/இரண்டாம் ஆண்டு மற்றும் இடைநிலை பொதுத்தேர்வுகள் நடைபெறும் நாட்களில் முதன்மைக் கண்காணிப்பாளர்கள், தேர்வு மையங்களில் தேர்வு முடிந்தவுடன் அன்றன்றே வருகை புரியாத மாணவர்களின் பயன்படுத்தாத முதன்மை விடைத்தாட்களை கட்டுகளாகக் கட்டி முதன்மைக் கண்காணிப்பாளர் மற்றும் துறை அலுவலர் ஆகியோர் 2 ஆசிரியர்கள் முன்னிலையில் தேதியுடன் கையொப்பமிட்டு சீலிடப்பட்டு, பயன்படுத்தாத வினாத்தாள் பாதுகாப்பதைப் போன்றே பாதுகாப்பாக அறையில் வைத்து பூட்டி அரக்கு முத்திரையிடப்பட வேண்டும்.

பார்வையில் காண் இவ்வலுவலகக் கடிதத்தில் தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர்கள், உழைப்பூதியம் மற்றும் சில்லரைச் செலவினம் தொடர்பான பற்றுச்சீட்டுகளை 08.04.26 முதல் 13.04.26 வரையில நாட்களில் சம்பந்தப்பட்ட மாவட்ட விடைத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் ஒப்படைக்கும்போது தேதிவாரியாக கட்டுகள் கட்டி சீலிடப்பட்ட பயன்படுத்தாத விடைத்தாட்களையும் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று அனைத்து முதன்மைக் கண்காணிப்பாளர்களுக்கும் துறை அலுவலர்களுக்கும் அறிவுறுத்துமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு:

பார்வையில் காணும் கடித நகல்

நகல்

அனைத்து அரசுத் தேர்வுகள்

உதவி இயக்குநர்கள்.

No comments:

Post a Comment