Breaking

Wednesday, January 7, 2026

"உங்கள் கனவை சொல்லுங்கள்" UKS - 09.01.2026 அன்று திருவள்ளூர் மாவட்டத்தில் தொடங்கி வைக்க இருப்பதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அறிவிப்பு!



"உங்கள் கனவை சொல்லுங்கள்" UKS - 09.01.2026 அன்று திருவள்ளூர் மாவட்டத்தில் தொடங்கி வைக்க இருப்பதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அறிவிப்பு! "Tell Your Dream" (UKS) - The School Education Minister has announced that this program will be launched on January 9, 2026, in Tiruvallur district!

மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் இன்று (06.01.2026) சென்னை, தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி பொதுவாக அமைச்சரவைக் கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களை காண்பது வழக்கம் கிடையாது. ஏனென்றால் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் நடைபெறுகின்ற ஒரு அமைச்சரவைக் கூட்டம் இரகசியமான இருக்கக்கூடிய பொருள்களை சார்ந்து தான் நாங்கள் கலந்துரையாடுவோம். அது எங்களுக்குள்ளாகவே முடிந்துவிடும். ஆனால் முதன்முதலாக அமைச்சரவைக் கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களை காண வந்திருக்கிறோம் என்றால் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் எண்ணத்தில் உதித்த ஒரு திட்டம் சார்ந்த மக்களிடம் கொண்டு செல்லவேண்டும் என்கின்ற எண்ணத்தின் அடிப்படையில் தான், குறிப்பாக அந்தத் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன்பாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சொன்னது என்பது மக்களாட்சி என்பது குடிமக்களின் கனவுகளை நனவாக்க, கருவியாக ஒரு அரசு செயல்படுவது தான் மக்களாட்சி என்று சொல்கிறார்கள். என்ன திட்டம் முதலமைச்சர் அவர்கள் சொல்லப் போகிறார் என்று நாங்கள் எல்லாம் பார்த்தபோது, இன்றைக்கு தொடர்ந்து நாம் நான்கரை வருடமாக ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறோம். நான்கு வருடமாக இருக்கிறோம் என்பது நடுவில், நமக்கு நாடாளுமன்ற தேர்தல் வந்தது. உள்ளாட்சி அமைப்பைச் சார்ந்த தேர்தல் வந்தது. இடைத்தேர்தல்கள் வந்தது. SIR பணிகள் காரணமாக அதிகாரிகளின் அந்தப் பணியில் ஈடுபட்டிருந்தார்கள் ஒட்டுமொத்தமாக மூன்று வருஷத்தில் நாம் எவ்வளவு சாதித்திருக்கிறோம் என்று பார்க்க முடிகிறது.

2021-ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு கொரோனா தொற்றிலிருந்து நாம் மீள்வதற்கே எத்தனை மாதங்கள் ஆனது என்பதையெல்லாம் பத்திரிகை மற்றும் ஊடகத் துறையைச் சார்ந்த நண்பர்களுக்கு உங்களுக்கெல்லாம் தெரியும். இன்றைக்கு அதையெல்லாம் கடந்து மாண்புமிகு முதலமைச்சர் பொருளாதார இலக்கை இரட்டை இலக்கு எந்தளவுக்கு ஒட்டுமொத்த இந்தியாவிலேயே நம்பர் 1 ஸ்டேட்டாக இன்றைக்கு குறிப்பாக சூப்பர் ஸ்டார் ஸ்டேட் என்று சொல்கின்ற அளவுக்கு பெயரை நாம் பெற்றிருக்கின்றோம். அவர் பேசும்போது. இது மட்டும் போதுமா? இன்னும் செய்யவேண்டும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அடிக்கடி சொல்லிக் கொண்டே இருப்பார். அதனடிப்படையில் தான், பல நிதி நெருக்கடி இருந்தாலும் பல்வேறு திட்டங்களை சார்ந்த. ஒரே ஒரு பேருந்தை மட்டும் எடுத்துக் கொண்டால், அந்தத் திட்டத்தின் ஒரு டிராவலாகவே நீங்கள் பார்க்கலாம். விடியல் பயணத் திட்டத்தின் மூலமாக அந்த பேருந்தில் பயணம் செய்கின்ற ஒரு இளைய சமுதாயம் என்னுடைய தம்பி தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் மூலமாக மாதம் ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய தம்பி இந்த பேருந்தில் போகிறார் புதுமைப் பெண் திட்டத்தின் மூலமாக மாதம் ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய என்னுடைய தங்கை அந்தப் பேருந்தில் பயணம் செய்கிறார்கள் நேற்றிலிருந்து அவருடைய கடைசி வருட மாணவன் என்று சொன்னால் அவர்களுடைய மடியில் மடிக்கணினியும் இருக்கப் போகிறது.

அதே பேருந்தில் காலை உணவு திட்டத்தின் மூலமாக தன்னுடைய குழந்தையை அழைத்துச் செல்லக்கூடிய தாய்மார்கள், கலைஞர் உரிமைத் தொகை பெறும் ஆயிரம் ரூபாய் பெறுகின்ற அந்த தாய்மார்கள் பேருந்தில் பயணிக்கிறார்கள். அந்த பேருந்தில் கிராமம் வாரியாக நீங்கள் போகும்போது சாலைகள் நன்றாக இருக்கின்றது ஏன். முதலமைச்சரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் மூலமாக -அந்த பேருந்தில் நீங்கள் போகும்போது சைடில் நீங்கள் பார்த்துக் கொண்டு வரும்போது, கலைஞர் கனவு இல்லம் கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் பார்க்கும் போது உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மற்றொரு பக்கம் பார்க்கும் போது, நலன் காக்கும் ஸ்டாலின் முகாம்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அன்புக் கரங்கள் திட்டம் தாயுமானவர் திட்டம் என்று ஒவ்வொரு திட்டமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நம்முடைய மாநிலத்தைப் பார்த்து, மற்ற மாநிலங்கள் நாமும் இதுபோன்ற திட்டங்களை கொண்டு வரவேண்டும் என்று சொல்கிறார்கள். ஒரு விடியல் பயணத்தின் மூலமாக கொண்டு வருகின்ற திட்டங்கள் எல்லாம் எப்படி கொண்டு வருகிறோம் மக்களுடைய அந்தப் பணத்தின் மூலமாக பயனுள்ள திட்டத்தை மீண்டும் மக்களுக்கே நாங்கள் தருவதை பார்க்கிறீர்களா? அல்லது பயனற்ற திட்டங்களை சில பேர் செய்துவிட்டு, வீண் விரையம் செய்தார்களே அதை நீங்கள் பார்க்கப் போகிறீர்களா? தமிழ்நாடு முதலமைச்சர் சொன்னது போல, நல்லது ஒரு பக்கம், கெட்டது ஒரு பக்கம் இருக்கும் எதை நீங்கள் பார்க்கப் போகிறீர்கள். எங்களைப் பொறுத்தவரைக்கும். தமிழ்நாட்டு மக்கள் தரப்போகின்ற பணத்தின் மூலமாக பயனுள்ள திட்டங்களை வழங்கவேண்டும் என்று நாங்கள் ஆசைப்படுகிறோம்.

இந்தத் திட்டங்களை எல்லாம் செய்து இன்றைக்கு மிகப் பெரிய foundation நாம் கொண்டு வந்திருக்கிறோம் அந்த foundation-ன் அடுத்த கட்டமாக அந்த transformation என்பது ஒரு வளர்ச்சியை நோக்கி செல்ல வேண்டும் என்பதற்காக தான் GDP-ஆக இருந்தாலும், GSDP-ஆக இருந்தாலும் வளர்ச்சியை நோக்கி நாம் கொஞ்சம், கொஞ்சமாக சென்று கொண்டிருக்கிறோம். மற்ற மாநிலங்கள், ஏன் மற்ற நாடுகள் எல்லாம் உற்று நோக்குகின்ற மாநிலமாக நம்முடைய மாநிலம் இன்றைக்கு மாறிக்கொண்டிருக்கிறது. நமக்கெல்லாம் ஒரு பெருமை அடுத்த கட்டம் என்ன செய்யலாம்? இதுவரைக்கும் எந்த ஒரு அரசாங்கமும் செய்யாத ஒரு வரலாற்று நிகழ்வாக நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இன்றைக்கு சொன்னது "உங்க கனவு சொல்லுங்கள்", நம்முடைய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் MKS, இந்த நாட்டிற்கு வழங்கக்கூடிய UKS திட்டமாக நீங்கள் பார்க்கப் போகிறீர்கள்.

உங்க கனவை சொல்லுங்கள் என்றால் என்ன? ஒவ்வொரு குடும்பமும் சார்ந்து ஒரு கனவு இருக்கும் தனக்கு என்ன வேண்டும் - தன்னுடைய ஊருக்கு என்ன வேண்டும் தன்னுடைய நாட்டுக்கு என்ன வேண்டும் உதாரணத்திற்கு, வெளிநாட்டிற்கு செல்லும்போது, நாம் ஒப்பிட்டுப் பார்த்து சொல்வோம் சாலைகள் எல்லாம் மிகவும் அருமையாக இருக்கிறது மிகவும் ஒழுங்காக, டிராஃபிக்கை ஃபாலோ செய்கிறார்கள் குப்பையே இல்லை என்று நாம் சொல்வோம். ஆனால், அதுபோன்று என்னுடைய வார் வேண்டும் என்று ஒவ்வொருவருக்கும் ஒரு கனவு இருக்கும் அரசாங்கம் சார்ந்த திட்டங்கள் அதன் கொள்கையைச் சார்ந்து போய்க் கொண்டிருக்கும் என்னுடைய மாநிலம் எப்படி இருக்கவேண்டும் என்றால் என்று ஆசைப்படலாம் உங்க கனவு சொல்லுங்கள் என்பது ஒரு குடும்பத்தைச் சார்ந்தது என்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதை செய்திட வேண்டும்,

தமிழ்நாடு முதலமைச்சர் MKS அவர்களின் அடுத்த திட்டம் "உங்கள் கனவை சொல்லுங்கள்" UKS - 09.01.2026 அன்று திருவள்ளூர் மாவட்டத்தில் தொடங்கி வைக்க இருப்பதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அறிவிப்பு!

CLICK HERE TO DOWNLOAD பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அறிவிப்பு PDF

No comments:

Post a Comment