Breaking

Friday, January 9, 2026

TAPS - அரசு ஊழியர்களை ஏமாற்றும் தி.மு.க.,! - 'இ-மெயில்' கடிதம்



TAPS - அரசு ஊழியர்களை ஏமாற்றும் தி.மு.க.,! - 'இ-மெயில்' கடிதம்

அரசு ஊழியர்களை ஏமாற்றும் தி.மு.க.,!

கு.காந்தி ராஜா, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ-மெயில்' கடிதம்:

அரசு ஊழி யர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, தொழி லாளர்களின், 10 சதவீத பங்களிப்புடன் கூடிய புதிய ஓய்வூதிய திட்டத்தை அறி வித்துள்ளது, தமிழக அரசு. 30 ஆண்டுகள் பணி முடித்தவர்கள் கடைசியாக வாங்கும் ஊதியத்தில், 50 சதவீத தொகை உறுதிப் படுத்தப்பட்ட ஓய்வூதியமாக கிடைக்கும் என்றும் அறிவித்துள்ளது.

இத்திட்டத்தை அறிவித்த முதல்வர், 2003க்கு முன்பிருந்த பழைய ஓய்வூதிய திட்டத்தை, மீண்டும் அமல்படுத்த கோரி கடந்த 20 ஆண்டுகளாக போரடிக் கொண் டிருக்கும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசி ரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றி விட்டதாக பெருமைப்பட்டுள்ளார்.

ஆனால், 2003க்கு முன்பிருந்த பழைய ஓய்வூதிய திட்டத்திற்கும், இப் போது ஸ்டாலின் அறிவித்திருக்கும் புதிய ஓய்வூதிய திட்டத்திற்கும் எவ்வித சம்பந்த மும் இல்லை; இரண்டையும் சம்பந்தப்ப டுத்துவது மொட்டை தலைக்கும், முழங் காலுக்கும் முடிச்சுப் போட முயற்சிப்பது போன்றது! சுருக்கமாகச் சொன்னால், ஸ்டாலின் |கொண்டு வந்திருக்கும் புதிய ஓய்வூதிய திட்டம், தொழிலாளர்கள் செலுத்தும், 10 சதவீத பங்களிப்பு தொகைக்கு, வட்டி போட்டு அவர்கள் ஓய்வு பெற்றபின், 'பென்ஷன்' என்ற பெயரில் திருப்பி அளிக் கப்படுகிறது. இதில், அரசின் பங்களிப்பு தொகை என்று எதுவும் இல்லை. அரசின் பென்ஷன் திட்டத்தில் தொழிலாளர்கள் சேராமல், மாதந்தோறும் தங்கள் ஊதியத்தில், 10 சதவீத தொகையை ஓய்வு பெறும் காலம் வரையும், ஓய்வு பெற்ற பின்பும் ஏதேனும் வங்கியில் முதலீடு செய்தால், அரசு தரும் பென்ஷன் தொகையை விட, அதிக வட்டி கிடைப் பதுடன், முதலீட்டு தொகையும் முழுமையாக கிடைக்கும்!

ஜாக்டோ - ஜியோ தி.மு.க., ஆதரவு சங்கம் என்பதால், அச்சங்கத்தை பயன்படுத்தி தொழிலாளர்கள் தலையில் மிளகாய் அரைத்துள்ளது, தி.மு.க., அரசு.

இது நேர்மையான அரசாக இருந்தால், இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தை போக்குவரத்து மற்றும் தொழிலாளர்களுக்கு ஏன் வில்லை? மின்வாரிய அறிவிக்க அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தேர்தல் அதிகாரிகளாக பணியாற்றுவதால், அவர்களை வைத்து பயனடையவே இந்த புதிய ஓய்வூதிய திட்டம்!

கடந்த 57 மாதங்களாக களாக எதுவுமே செய் யாமல், சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், கம்யூனிஸ்ட் மற்றும் தி.மு.க., ஆதரவு தொழிற்சங்கங்களுடன் பேசி வைத்து, அமல்படுத்தப்படும் தேதி கூட அறிவிக்காமல், இப்புதிய ஓய்வூதிய திட் டத்தை அறிவித்திருப்பதிலிருந்து தெரிந்து கொள்ளலாம், தி.மு.க., அரசின் ஏமாற்று வேலையை! an email letter from Ku. Gandhi Raja, Chennai, published in a newspaper, criticizing the DMK government's new pension scheme for government employees and teachers. The author claims the scheme deceives employees by offering a plan that is fundamentally different from the old pension scheme and primarily returns the employees' own 10% contribution with interest, without significant government contribution.

The Tamil Nadu government announced a new pension scheme with a 10% employee contribution.

The author argues the new scheme is not the same as the old one from before 2003, despite the Chief Minister's claims.

The scheme essentially returns employees' own contributions with interest after retirement, lacking real government contribution. The author suggests employees would get better returns by investing their 10% contribution privately in a bank.

No comments:

Post a Comment