A government school teacher in Krishnagiri district, Tamil Nadu, was sentenced to 5 years in prison under the POCSO Act by the Krishnagiri court for sexually assaulting a 10-year-old fifth-grade student in April 2022. He was also sentenced to an additional one year for threatening the student, with the sentences to run concurrently.
அரசு பள்ளி ஆசிரியருக்கு 5 ஆண்டுகள் சிறை - கிருஷ்ணகிரி நீதிமன்றம் தீர்ப்பு
போக்சோ வழக்கில் அரசு பள்ளி ஆசிரியருக்கு 5 ஆண்டுகள் சிறை
கிருஷ்ணகிரி நீதிமன்றம் தீர்ப்பு Government school teacher sentenced to 5 years in prison - Krishnagiri court verdict.
கிருஷ்ணகிரி,டிச.12-கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி தாலுகா கெம்பகரையை சேர்ந்தவர் லாரன்ஸ் (வயது 52). இவர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்தார். இவர் கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28-ந் தேதி 5-ம் வகுப்பு படித்த 10 வயது மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார். மேலும் இதை யாரிடமாவது கூறினால் அடித்து விடுவேன் என மாணவியை மிரட்டினார். இது குறித்து மாணவி தனது பெற்றோரிடம் கூறினார். இதையடுத்து அவர்கள் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர்.
அதன பேரில் போலீசார் விசாரணை | நடத்தி ஆசிரியர் லாரன்சை கைது செய்து, போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு கிருஷ்ணகிரி மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி சுதாதீர்ப்பு கூறினார். அதன்படி குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் லாரன்சுக்கு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததற்காக5 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.1,000 அபராதம், மிரட்டியதற்கு ஒரு ஆண்டு சிறை மற்றும் ரூ.1,000 அபராதம் விதித்தார்.
இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் உமாதேவி மங்களமேரி ஆஜரானார்.

No comments:
Post a Comment