Breaking

Saturday, December 13, 2025

மாணவர்கள் அரசு இ-சேவை மையங்களில் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

மாணவர்கள் அரசு இ-சேவை மையங்களில் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

மாற்றுத்திறன் மாணவர்கள் அரசு இ-சேவை மையங்களில் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாற்றுத்திறன் மாணவ மாணவியர்கள் கல்வி உதவித்தொகை 15ம் வகுப்பு பயிலும் மாற்றுத் திறன் மாணவர்களுக்கு ரூ.2000ம். 68ம் வகுப்பு பயிலும் மாற்றுத்திறன் மாணவர்களுக் கு ரூ.6000ம், 912ம் வகுப்பு பயிலும் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு ரூ.8000ம், பட்டப்படிப்பு பயிலும் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு ரூ.12,000 ம், தொழிற்கல்வி மற்றும் முதுகலைப் பட்டம் பயிலும் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு ரூ. 14000ம் வருடாந்திர உதவித்தொகை வழங்கப் படுகிறது. மேலும், வாசிப்பாளர் உதவித் தொகை 912ம் வகுப்பு பயிலும் பார்வையற்ற மாற்றுத்திறன் மாணவர்களுக்கு ரூ.3000ம், இளங்கலைப் பட்டம் பயிலும் பார்வையற்ற மாற்றுத்திறன் மாணவர்களுக்கு ரூ.5000ம். தொழிற்கல்வி மற்றும் முதுகலைப் பட்டம் பயிலும் பார்வையற்ற மாற்றுத்திறன் மாணவர்களுக்கு ரூ.6000ம் வாசிப்பாளருக்கு வழங்கப் படும். இவ்வுதவித்தொகை பெற அரசு இசேவை மையங்களில் மாற்றுத் திறன் தேசிய அடையாள அட்டை, தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள (UDID CARD) மருத்துவச் சான்று, ஆதார் அட்டை குடும்ப அட்டை, புகைப்படம் 1. கல்வி பயிலும் பள்ளி தலைமையாசிரியர். கல்லூரிமுதல்வரிடமிருந்து பெறப்படும் -26 நிதியாண்டிற்கான கல்விச்சான்று (BONA-FIDE CERTIFICATE) 2025 போன்றவற்றை அரசு இசேவை மையத்தில் பதிவேற்றம் செய்து உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் சினேகா தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment