பள்ளிகளில் தெரு நாய்களை கண்காணிக்க நோடல் அலுவலர் நியமிக்க உத்தரவு Order to appoint nodal officer to monitor stray dogs in schools
தமிழகம் பள்ளி வளாகங்களில் தெரு நாய்கள் நுழைந்து விடாமல் தடுத்து கண்காணிக்க நோடல் அலுவலர்களை நியமிக்க தலைமையாசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவுவிட்டுள்ளது.மாநிலம் முழுவதும் தெரு. வெறி நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. நாய்க் கடிக்கு பாதிப்போர் எண் ணிக்கை உயர்ந்து வருகிறது. குறிப்பாக பள்ளி செல்லும் குழந்தைகளை விரட்டுவது, கடிப்பது. இதனால் ஏற்படும் விபத்துகள் ஏற்படுகின்றன. தெரு நாய்களுக்கு காப்பகம் அமைத்து பராமரிக்க வேண் டும் என நீதிமன்றம் உத்தர விட்டாலும் அது இன்னும் பெரும்பாலான நகரங்களில் நடைமுறைக்கு வரவில்லை.
இந்நிலையில் தெரு நாய்கள் அச்சுறுத்தலால் ஏற்படும் மாணவர்கள் பாதிப்பை மனதில் கொண்டு பள்ளிகள் அளவில் தலைமையாசிரியர்கள் சில வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதில், வீடுகளில் வளர்க்கும் நாய்களுக்கு முறையாக தடுப்பூசி செலுத்த வேண்டும் என பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டங்களில் வலியுறுத்துவது, தெரு நாய்கள் பிரச்னை குறித்து உடன் உள்ளாட்சி அலுவலர்களுக்கு தகவல் தெரிவிப்பது, மாணவர்கள் தெரு நாய்களுடன் பழக, உணவு வழங்ககூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்துவதை வலியுறுத்தியுள்ளது.
இதுதவிர பள்ளி வளாகத்திற்குள் துாய்மை பணியுடன் தெரு நாய்கள் நுழைவதை தடுத்து கண்காணிக்க ஒரு நோடல் அலுவலரை நியமிக்க வேண்டும் என தலைமையாசிரியர்களுக்கு உத்தர விடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தலைமை யாசிரியர்கள் கூறுகையில், ஏற்கனவே அரசு பள்ளிகளில் தூய்மைப் பணியாளர், வாட்ச்மேன் என எந்த அடிப்படை பணியாளர்களும் இல்லை. ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. அலுவலர்கள் இல்லாத நிலையில் ஆசிரியரை நான் நோடல் அலுவலராக நியமிக்க வேண்டும். அவர் கற்பித்தல் பணியை மேற்கொள்வாரா, தெருநாய் உள்னே வருகிறதா என்பதை கவனிப்பாரா?. குழப்பமாக உள்ளது" என்றனர்.
No comments:
Post a Comment