எஸ்ஐ (SI) பணிக்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாதிரி தேர்வு - A mock test for the SI (Sub-Inspector) post at the employment office.
எஸ்ஐ (SI)பணிக்கு டிசம்பர் 16ல் மாதிரி தேர்வு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடக்கிறது
நாகர்கோவில், டிசம்பர். 12-குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் காவல் சார் ஆய்வாளர்கள் தாலுகா பதவிகளுக்கு 933 காலி பணி யிடம், ஆயுதப்படை பதவிகளுக்கு 366 பணி காலியிடம் என மொத்தம் 1299 காலி பணி இடங்களுக்க நேரடிதேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 21-12-2025 காவல் சார் ஆய்வாளர்கள் தேர்வானது தமிழ்நாடு சீருடை பணி யாளர் தேர்வு வாரியத்தால் நடக்கிறது. தேர்வுக்கு தயாராகும் வகையில் வரும் 16 (செவ்வாய்க்கிழமை) மாவட்ட வேலை வாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் இலவச மாதிரி தேர்வு காலை 10 மணிக்கு நடக்கிறது. மாணவர்கள் 9.30 மணிக்குள் வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மாதிரி தேர்வில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் அனைவரும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்,தேர்வி ற்கு விண்ணப்பித்த விண்ணப்ப நகல், தேர்வு நுழைவுச்சீட்டு, ஆதார் அட்டை நகல் ஆகிய ஆவணங்களை தேர்வு நாள் அன்று கொண்டு வர வேண்டும்.
தேர்வில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் இவ்வலுவலக Telegram Channel Ýù Employment office Nager-coil-ல் பகிரப்பட்டுள்ள Google form ஐ பிழையின்றி முன்பதிவு செய்து கொள்ளுமாறும், முன்பதிவு செய்யும் மாணவர்கள் மட்டுமே இத்தேர்விற்கு அனுமதிக்கப்ப டுவர் என்ற விவரம் தெரிவித்துக் கொள் ளப்படுகிறது. இந்த வாய்ப்பினை போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment